வட மாகாணசபைத் தேர்தலின் போது வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் ஈடுபடுத்தப்பட வேண்டும் - பிரித்தானியா
வடக்கில் சுயாதீனமானதும், நீதியானதுமான முறையில் தேர்தல் நடத்தப்பட வேண்டியது அவசியமானது என பிரித்தானிய அமைச்சர் சயிடா வாராசீ தெரிவித்துள்ளார். அண்மையில் பிரித்தானியாவில் நடைபெற்ற க்ளோபல் தமிழ் போரம் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதா இல்லையா என்பதனை இன்னமும் பிரித்தானியா தீர்மானிக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு பரிந்துரைகள் முழுமையாக அமல்படுத்துவதன் மூலம் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வட மாகாணசபைத் தேர்தலின் போது வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் ஈடுபடுத்தப்பட வேண்டும் - பிரித்தானியா
Reviewed by Admin
on
March 03, 2013
Rating:

No comments:
Post a Comment