த.தே.கூ. உறுப்பினர்கள் வடக்கில் வீடு கட்ட ஒரு கல்லை கூட பெற்றுக்கொடுத்தார்களா? பஷில்
மன்னார் மாவட்டத்தில் மாந்தை மேற்கு பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள அடம்பன் கிராமத்தில் 300 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட குடி நீர் விநியோகத்திட்டத்தை வைபவ ரீதீயாக இன்று ஞாயிற்றுக் கிழமை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். கடந்த 20 வருடங்களாக இலங்கையில் வாழும் மக்கள் பயங்கரவாத செயற்பாடுகளினால் பாதிப்புக்குள்ளாகியிருந்தனர்.
அந்த நிலையினை இந்த நாட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மாற்றியமைத்து சகலரும் அனுபவிக்கக் கூடிய சமாதானத்தை ஏற்படுத்தி தந்துள்ளார். அதனை குறிப்பாக வடமாகாண மக்கள் அனுபவித்து வருகின்றனர். வெளிநாடுகளில் இருந்து பெறப்படுகின்ற நிதிகளின் அதிகமானவை வடமாகாணத்தின் அபிவிருத்திக்கே செலவிடப்படுகின்றன. இலங்கையில் 80 சதவீதமான வாழும் பௌத்தர்களால் வழிபடும் தலதா மாளிகையின் நிர்மாணத்துக்கு கூட வழங்ககப்படாத நிதிகள் மடு தேவாலய புனரமைப்புக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதனை உலகில் கத்தோலிக்க மக்களது பிரதான வணக்க தலமாக மாற்ற வேண்டும் என்பது தான் எமது பிரதான நோக்கமாகும். அதே போன்று தமிழ் மக்களது பிரசித்தம் பெற்ற 5 திருத்தலங்களில் ஒன்றான மன்னார் திருக்கேதீஸ்வரம் கோயில் புனரமைப்புக்கு என 350 கோடி ரூபாய்கள் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. இவைகளெல்லாம் இப்பிரதேசத்தில் வாழும் தமிழ் மக்களின் தேவைகாளகவுள்ளது. இவ்வாறு எம்மால் முன்னனெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்களை தடுப்பதற்கும், மக்கள் அதனை அனுபவிக்க கூடாது என்ற நோக்கத்தோடு சர்வதேச புலம் பெயர் சமூகத்திடம், நாடுகளிடமும் சென்று தமிழ் கூட்டடைப்பு பிழையான தகவல்களை வழங்கிவருகின்றது.
த.தே.கூ. உறுப்பினர்கள் வடக்கில் வீடு கட்ட ஒரு கல்லை கூட பெற்றுக்கொடுத்தார்களா? பஷில்
Reviewed by Admin
on
March 03, 2013
Rating:

No comments:
Post a Comment