மன்னார் பொலிஸ் நிலையத்தில் பெண்கள்,சிறுவர் பிரிவு காரியாலயம் தனிமையாக திறப்பு--படங்கள்
குறித்த நிகழ்வின் போது மாதர் கிராம அபிவிருத்திச் சங்க பிரதி நிதிகள்,மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துஸார தலுவத்த,உதவி பொலிஸ் அத்தியட்சகர் சுகந்தபால மாதர் அபிவிருத்தி ஒன்றிய இணைப்பாளர் மகாலட்சுமி மற்றும் மன்னார் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
குறித்த புதிய அலுவலகத்திற்கு தேவையான கணணி,கதிரைத்தொகுதிகள் அனைத்தும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கருத்துத்தெரிவித்த மாதர் அபிவிருத்தி ஒன்றிய இணைப்பாளர் மகாலட்சுமி ,,,
இது வரை காலமும் பெண்கள்,சிறுவர் பிரிவு மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒரே கட்டிடத்தில் இயங்கி வந்தது.
இதனால் பெண்கள் தமது முழு பிரச்சினைகளையும் முறையிடுவதில் தயக்கம் காட்டி வந்தனர்.
இந்த நிலையில பெண்கள் தமது பிரச்சினையை எவ்வித தயக்கமும் இன்றி முழுமையாக முறைப்பாடு செய்யும் வகையில் குறித்த அலுவலகம் தனிமையாக அமைக்கப்பட்டுள்ளது. என அவர் தெரிவித்தார்
மன்னார் பொலிஸ் நிலையத்தில் பெண்கள்,சிறுவர் பிரிவு காரியாலயம் தனிமையாக திறப்பு--படங்கள்
Reviewed by Admin
on
March 21, 2013
Rating:
No comments:
Post a Comment