வவுனியா மேல் நீதிமன்றத்தினால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்ட சந்தேக நபரை உடன் கைது செய்யுமாறு மன்னார் மேல் நீதிமன்றம் உத்தரவு.
போதைப்பொருள் வைத்திருந்தமை தொடர்பில் கைது செய்யப்பட்டு வவுனியா மேல் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் பிணையில் விடுவிக்கப்பட்ட நபரை உடன் கைது செய்யுமாறு மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி எஸ்.தியாகேந்திரன் நேற்று முந்தினம் வியாழக்கிழமை (2103-2013) உத்தரவிட்டார்.
-சுமார் ஒரு கோடி 50 இலட்சம் ரூபாய் பெருமதியுடைய 514.1 கிராம் நிறைகொண்ட ஹொரோயின் போதைப்பொருளுடன் கடந்த 08-11-2004 அன்று தலைமன்னார் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட சதாசிவம் ரவீந்திரன் என்பவர் உடன் மன்னார் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட நிலையில் தொடர்ச்சியாக மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைவாக விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
-இந்த நிலையில் தலைமன்னார் பொலிஸாருக்கு சட்டமா அதிபர் திணைக்களத்தில் இருந்து பல வருடங்களுக்குப்பின் குறித்த வழக்கு விசாரனைகளை வவுனியா மேல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டது.
இந்த நிலையில் குறித்த வழக்கு விசாரனைகள் வவுனியா மேல் நீதிமன்றத்தில் இடம் பெற்று வந்தது.இந்த நிலையில் குறித்த நபர் தொடர்பாக பிணை மனு வவுனியா மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இதன் போது வவுனியா மேல் நீதிமன்ற பதிவாளர் குறித்த பிணை தொடர்பாக சத்தியக்கடதாசியை தயாரித்து மேல் நீதிமன்றில் சமர்ப்பித்துள்ளார்.
-இதனைத் தொடர்ந்து மேல் நீதிமன்ற நீதிபதி விசாரனைகளின் பின் குறித்த நபரை பிணையில் செல்ல அனுமதித்தார்.
இந்த நிலையில் பிணையில் சென்ற குறித்த நபர் அன்று முதல் வவுனியா மேல் நீதிமன்றத்திற்கு வழக்கு விசாரனைகளுக்கு செல்லாத நிலையில் தலைமறைவான நிலையில் இருந்துள்ளார்.
இந்த நிலையில் மன்னாரில் புதிய மேல் நீதிமன்றம் அமைக்கப்பட்ட நிலையில் குறித்த வழக்கு மன்னார் மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
இந்த நிலையில் குறித்த வழக்கு மன்னார் மேல் நீதிமன்றத்தில் விசாரனைகளுக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.
மன்னார் மேல் நீதிமன்ற அரச சட்டத்தரணி எஸ்.சூசைதாசன் குறித்த வழக்கு தொடர்பாக மன்னார் மேல் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்ததோடு வவுனியா மேல் நீதிமன்ற பதிவாளரினால் வழங்கப்பட்ட சத்தியக்கடதாசி தொடர்பாகவும் மேல் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.
இந்த நிலையில் எதிர்வரும் 21-03-2013 அன்று வவுனியா மேல் நீதிமன்ற பதிவாளரையும்,அனுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகரையும் மன்னார் மேல் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு மேல் நீதிமன்ற நீதிபதி எஸ்.தியாகேந்திரன் கடந்த 11.3.2013 அன்று உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில் குறித்த வழக்கு விசாரனை கடந்த 21 ஆம் திகதி வியாழக்கிழமை மன்னார் மேல் நீதிமன்றத்தில் இடம் பெற்றது.
இதன் போது வவுனியா மேல் நீதிமன்ற பதிவாளர் தனது சட்டத்தரணியுடன் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார். இதன் போது பதிவாளர் வழங்கியிருந்த சத்தியக்கடதாசி தொடர்பாக மேல் நீதிமன் நீதிபதி பதிவாளரிடம் விளக்கம் கோரியிருந்தார்.
இதன் போது குறித்த சத்தியக்கடதாசி தொடர்பில் விளக்கம் தருவதற்கு தனக்கு கால அவகாசம் தருமாறு மேல் நீதிமன்ற பதிவாளர் தனது சட்டத்தரணியுடன் மன்றில் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதே வேளை பிணையில் சென்ற சதாசிவம் ரவீந்திரன் என்ற சந்தேக நபர் பல முகவரியில் பல பெயருடன் நடமாடித்திரிவதாக அரச சட்டத்திரணி மன்னார் மேல் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.
இந்த நிலையில் மேல் நீதிமன்ற நீதிபதி ஆட்பதிவு திணைக்கள ஆணையாளருக்கு சதாசிவம் ரவீந்திரன் என்பவருக்கு வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை தொடர்பான விபரக்கொத்தை மன்றில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டார்.
இதே வேளை சதாசிவம் ரவீந்திரன் என்பவரை உடன் கைது செய்யுமாறு மன்னார் பொலிஸ் அத்தியட்சகருக்கு மன்னார் மேல் நீதிமன்றம் பிடியானை விடுத்துள்ளது.
இந்த நிலையில் குறித்த வழக்கு விசாரனை எதிர்வரும் 20-05-2013 அன்று மீண்டும் மன்னார் மேல் நீதிமன்றத்தில் விசாரனைக்காக எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
வவுனியா மேல் நீதிமன்றத்தினால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்ட சந்தேக நபரை உடன் கைது செய்யுமாறு மன்னார் மேல் நீதிமன்றம் உத்தரவு.
Reviewed by NEWMANNAR
on
March 23, 2013
Rating:

No comments:
Post a Comment