புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள போப் பிரான்சிஸ் இன்று பதவியேற்கிறார்.

வாடிகன் நகரத்தில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் நடக்கும் பதவியேற்பு விழாவில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்கின்றனர்.
இந்நிகழ்ச்சியில் ஜேர்மன் ஜனாதிபதி ஏஞ்சலா மெர்கல், ஸ்பெயின் பிரதமர் மரியானோ ரஜாய், பிரான்சு பிரதமர் ஜீன் மார்க் ஐரால்ட், அமெரிக்க துணை ஜனாதிபதி ஜோ பிடன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர். மேலும் போப் பிரான்சிஸின் தாய் நாடான அர்ஜென்டினாவின் ஜனாதிபதி, கிறிஸ்டினா கிர்ச்னரும் இவ்விழாவில் பங்கேற்கிறார்.
ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ள ஜிம்பாப்வே ஜனாதிபதி ராபர்ட் முகாபே, இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள போப் பிரான்சிஸ் இன்று பதவியேற்கிறார்.
Reviewed by Admin
on
March 19, 2013
Rating:

No comments:
Post a Comment