வன்னி மாவட்டத்திற்கான நாடாளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை ஆறில் இருந்து ஐந்தாக குறைக்கப்பட்டுள்ளது.
2012ம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு திருத்தத்திற்கு அமைய பதிவு செய்யப்பட்ட வாக்காளர் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியே இதற்கு காரணம் என வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கான உதவி தேர்தல் ஆணையாளர் ஏ.எஸ் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
மூன்று மாவட்டங்களை உள்ளடக்கிய வன்னி தேர்தல் தொகுதியின் 2012ம் ஆண்டு வாக்காளர் இடாப்பு திருத்தத்திற்கு அமைய மன்னார் மாவட்டத்தில் 70.085 வாக்காளர்களும், வவுனியா மாவட்டத்தில் 96.702 வாக்காளர்களும் பாதிவாகியுள்ளது.
ஆனால் தற்போது வன்னி மாவட்டத்தின் வாக்காளர் எண்ணிக்கை 2 இலட்சத்து 19 ஆயிரத்து 196 ஆக குறைவடைந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை,2012 ஆம் ஆண்டிற்கான வாக்காளர் இடாப்பு திருத்தங்களுக்கு அமைய,9 ஆக இருந்த பதுளை மாவட்டத்திற்கான நாடாளுமன்ற ஆசனம் 8 ஆக குறைந்துள்ளமையும், 6 ஆக இருந்த நுவரெலியா மாவட்டத்திற்கான ஆசனங்களின் எண்ணிக்கை 7 உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது
வன்னி மாவட்டத்திற்கான நாடாளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை ஆறில் இருந்து ஐந்தாக குறைக்கப்பட்டுள்ளது.
Reviewed by NEWMANNAR
on
March 23, 2013
Rating:

No comments:
Post a Comment