அண்மைய செய்திகள்

recent
-

உயர்தரப் பரீட்சைக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

நாளை ஆரம்பமாகவுள்ள ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சைக்கான மண்டபங்களின் பாதுகாப்பு கடந்த காலங்களைவிட இம்முறை மிகவும் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக கல்வித்திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 கடந்த காலங்களில் பரீட்சை மண்டபங்கள் மற்றும் வினாத்தாள்கள் வைத்திருக்கும் பாடசாலைகளுக்கு பொலிசார் மட்டுமே பாதுகாப்பு வழங்குவது வழமையாக இருந்தது. இம்முறை கடந்த காலங்களைப் போலல்லாது பரீட்சைத் திணைக்களமும் பாதுகாப்பு அமைச்சும் இணைந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

 பரீட்சை நடைபெறும் நாள்களில் குறிப்பாக ஒரு மாத காலத்துக்கு பாசாலைகளுக்கு ஆசிரியர்கள் செல்ல முடியாது என்பதுடன் பரீட்சை மண்டபத்தில் கடமையாற்றும் மேற்பார்வையாளர்கள், உதவியாளர்கள் என எவரும் பரீட்சை நடைபெறும் வேளையில் மண்டபத்தைவிட்டு வெளியே செல்ல முடியாது. அவ்வாறு யாராவது சென்றால் பொலிசார் அவர்களைக் கைது செய்யவும் முடியும்.

 பாடசாலைகளில் மேலதிக வகுப்புக்கள் நடத்தல் விளையாட்டுக்களை நடத்தல், போட்டிகளை நடத்ததல் என எந்த வகையான செயற்பாடுகளையும் மேற்கொள்ளக் கூடாதென பரீட்சைத் திணைக்களத்தினால் அனைத்து மாகாண கல்வித் திணைக்களங்கள், பணிப்பாளர்கள் அனைவருக்கும் இது தொடர்பான அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

உயர்தரப் பரீட்சைக்கு பாதுகாப்பு அதிகரிப்பு Reviewed by Admin on August 04, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.