மன்னாரில் வேட்பாளர்களின் விபரங்களை திரட்டும் புலனாய்வுத்துறையினர்- அச்சத்தில் வேட்பாளர்கள்
மன்னார் மாவட்டத்தில் வேட்பு மனுத்தாக்கல் செய்யப்பட்ட வேட்பாளர்களின் பெயர் விபரங்களை பெற்றுக்கொண்ட புலனாய்வுத்துறையினர் அவர்களின் தொலைபேசி இலக்கங்களை பெற்றுக்கொண்டு அவர்களை தொடர்பு கொண்டு அவர்களுடைய வீடுகளுக்குச் சென்று விபரங்களை பெற்றுக்கொள்ளுகின்றனர்.
வேட்பாளரின் பெயர்,கல்வி கற்ற பாடசாலை,செய்கின்ற தொழில், மற்றும் வேட்பாளரின் குடும்பத்தில் உள்ள அனைவருடைய பெயர் மற்றும் அவர்கள் தொடர்பான சகல விபரங்களை பெற்று வருகின்றனர்.
இதனால் போட்டியிடுகின்ற வேட்பாளர்களும் அவர்களுடைய குடும்பங்களும் அச்சத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இரவு நேரங்களிலும் வேட்பாளர்களின் வீடுகளுக்குச் சென்று விபரங்களை திரட்டி வருவதாக பாதிக்கப்பட்ட வேட்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மன்னாரில் வேட்பாளர்களின் விபரங்களை திரட்டும் புலனாய்வுத்துறையினர்- அச்சத்தில் வேட்பாளர்கள்
Reviewed by Admin
on
August 04, 2013
Rating:

No comments:
Post a Comment