போலி ஆவணங்களை சமர்ப்பித்து வீசாவை பெற முற்பட்ட இலங்கையர் ஒருவர் கைது
கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகரகத்தின் ஊடக அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் ஏற்கனவே வேறு பெயர்களில் நான்கு முறை வீசாவுக்காக விண்ணப்பித்திருந்தமை தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதுடன், அவர் கொழும்பு மோசடிகள் தடுப்பு காவற்துறையிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அவர் புதிய வீசா விதிகளின் படி, 10 ஆண்டுகளுக்கு பிரித்தானியாவுக்கு பயணம் செய்ய தடை விதிக்கப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போலி ஆவணங்களை சமர்ப்பித்து வீசாவை பெற முற்பட்ட இலங்கையர் ஒருவர் கைது
Reviewed by Admin
on
August 02, 2013
Rating:

No comments:
Post a Comment