மும்பை குற்றத்தடுப்பு பிரிவினரால் இலங்கை பாதுகாப்பு தரப்பினரிடம் தமிழ் இளைஞன் ஒப்படைப்பு
அரசாங்க தகவல் திணைக்களத்தின் இணையத்தளத்தில் இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது. 35 வயதான தேவா சதீஸ்குமார் என்ற அவர், மும்பை குற்றத்தடுப்பு பிரிவினரால் இலங்கை பாதுகாப்பு தரப்பினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் மும்பையில் இருந்து நைரோபிக்கு செல்ல முயற்சித்த போது கைது செய்யப்பட்டுள்ளார். தாம் வானூர்தி மூலம் இலங்கையில் இருந்து இந்தியா வந்ததாக அவர் தெரிவித்த போதும், அவர் படகு மூலமே இந்தியா சென்றிருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்தே அவர் நாடுகடத்தப்பட தீர்மானிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை குற்றத்தடுப்பு பிரிவினரால் இலங்கை பாதுகாப்பு தரப்பினரிடம் தமிழ் இளைஞன் ஒப்படைப்பு
Reviewed by Admin
on
August 02, 2013
Rating:
.jpg)
No comments:
Post a Comment