தூக்கில் தொங்கிய நிலையில் மூன்று பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு.
கிளிநொச்சி பொதுச் சந்தையில் சிறு வியாபாரம் செய்து வந்த சுப்பையா சகாதேவன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டவராவார்.
நேற்றுமுன்தினம் பிற்பகல் 4 மணியளவில் இவரது வீட்டில் தூக்கில் தொங்கியபடி இவர் உயிரிழந்து காணப்பட்டார்.
இச் சம்பவம் தொடர்பில் கிளிநொச்சிப் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு வந்த பொலிஸார் நேற்றுமுன்தினமிரவு சடலத்தை மீட்டு கிளிநொச்சி பொது மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
தூக்கில் தொங்கிய நிலையில் மூன்று பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு.
Reviewed by Admin
on
August 02, 2013
Rating:

No comments:
Post a Comment