வடக்கில் 90 வீத மாணவர்களுக்கு தேக ஆரோக்கியம் இல்லை
யாழ்ப்பாண மாணவர்களுக்கான மருத்துவப் பரிசோதனை முகாமின் ஆரம்ப நிகழ்வு யாழ்.மத்திய கல்லூரியில் நேற்றுமுன்தினம் புதன்கிழமை இடம்பெற்றது. இதில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது: தற்போது நாட்டின் அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழ்கிறார்கள். நான் அனுராதபுரத்தில் படிக்கும் போது தமிழ் முதலாளி ஒருவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்புக் கிடைத்தது. கடந்த காலத்தில் பல இன்னல்களை எதிர்கொண்டோம். எதிர்காலத்தில் அவற்றைச் சீர்செய்ய வேண்டும். கடந்த காலத்தைப் பற்றிப் பார்க்க விருப்பமில்லை.
பாடசாலைகளில் மாணவர்களின் கல்வியைச் சீர்ப்படுத்தவும், ஆரோக்கியத்தை வளப்படுத்தவும் இந்த மருத்துவ முகாம் பெரிதும் உதவும். நாட்டின் கல்வி, சுகாதாரத்துறைகள் வீழ்ச்சியடைந்த நிலை காணப்படுகின்றன. இதனை மாற்றியமைக்க வேண்டும். துரையப்பா மறைந்த பின்னர் பல இன்னல்களை எதிர்நோக்க வேண்டியிருந்தது. ஆனாலும் மாணவர்களுக்கான கற்றல் உதவிகளை நாம் வழங்கினோம். என்றார்.
வடக்கில் 90 வீத மாணவர்களுக்கு தேக ஆரோக்கியம் இல்லை
Reviewed by Admin
on
August 02, 2013
Rating:

No comments:
Post a Comment