மன்னார் பேசாலையில் சமூர்த்தி கொடுப்பனவு பெறச் சென்ற பயனாளிகள் மீது குளவிகள் தாக்குதல்-2 பேர் வைத்தியசாலையில் அனுமதிப்பு
மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட சமூர்த்தி பயனாளிகளுக்கான சமூர்த்தி கொடுப்பனவுகள் தற்போது வழங்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் தலைமன்னார் பியர் கிராம மக்கள் தமது மாதாந்த சமூர்த்தி கொடுப்பனவை பெற்றுக்கொள்ள இன்று காலை பேசாலை சமூர்தி வங்கிக்கு வருகை தந்தனர்.
இதன் போது மக்களுக்கு சமூர்த்தி பணம் வழங்கப்பட்டுக்கொண்டிருந்த போது மது போதையில் அவ்விடத்திடத்திற்கு வந்த ஒருவர் மரத்தில் இருந்த குளவிக்கூட்டின் மீது கல்லால் எறிந்துள்ளார். இதன் போது மரத்தில் இருந்த பெரும் குளவிகள் அப்பகுதியில் சமூர்த்தி கொடுப்பனவை பெற்றுக்கொள்ள பரவலாக காணப்பட்ட மக்களை துரத்தி துரத்தி கொட்ட ஆரம்பித்தது.
இதன் போது சமூர்த்தி அதிகாரிகள் பயனாளிகள் என அனைவரும் அவ்விடத்தை விட்டு ஓடிச் சென்றனர். இதன் போது குளவி தாக்குதலுக்கு உள்ளான 2 சமூர்த்தி பயனாளிகள் பேசாலை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
பின் மீண்டும் அவ்விடத்திற்கு வந்த மக்கள் தமது சமூர்த்தி கொடுப்பனவுகளை பெற்றுச் சென்றனர்.
மன்னார் பேசாலையில் சமூர்த்தி கொடுப்பனவு பெறச் சென்ற பயனாளிகள் மீது குளவிகள் தாக்குதல்-2 பேர் வைத்தியசாலையில் அனுமதிப்பு
Reviewed by Admin
on
August 02, 2013
Rating:
.jpg)
No comments:
Post a Comment