கடற்படைக்கு எதிராக மன்னார் சிறுத்தோப்பு கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்.-படங்கள்
இன்று காலை 9 மணியளவில் மன்னார் தலைமன்னார் பிரதான வீதியில் உள்ள சிறுத்தோப்பு ஆலயத்திற்கு சொந்தமான காணியில் அமைந்துள்ள கஜபா கடற்படை முகாமிற்கு முன் அமைதியான முறையில் குறித்த ஆர்ப்பாட்டம் இடம் பெற்றது.
இதன் போது மக்கள் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதனைத் தொடர்ந்து தலைமன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.எல்.எம்.ஜெமிம் சம்பவ இடத்திற்கு வருகை தந்து மக்களுடன் கலந்தரையாடினார்.
இதனைத் தொடர்ந்து மன்னார் உதவி பிரதேசச் செயலாளர் வி.பவாகரன் வருகை தந்து பொலிஸ்,கடற்படை அதிகாரிகளுடன் கலந்துரையாடியதன் பின் மக்களுடன் கலந்துரையாடினார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மக்களுக்கு தெரிவிக்கையில்,,,,
குறித்த காணியில் உள்ள இலங்கை கடற்படையின் கஜபா படையணிக்கான முகாம் அமைப்பது தொடர்பாக காணி சுவீகரிப்பு சட்டத்தின் (அத்-460) 2 ஆம் பிரிவின் கீழ் அறிவித்தல் வழங்கப்பட்டது.
இது தொடர்பான அறிவித்தல் பிரசுரம் காணி சுவீகரிப்பு உத்தியோகத்தரினால் குறித்த பகுதியில் ஒட்டப்பட்டது.இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பட்சத்தில் நாங்கள் உரிய நடவடிக்கை எடுப்போம்.இந்த வகையில் சிறுத்தோப்பு கிராம மக்களாகிய நீங்கள் ஒன்று திரண்டு எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளீர்கள்.
இந்த வகையில் இனி இந்த காணியில் எவ்வித அளவைகளும் இடம் பெறாது.தற்போது தேர்தல் காலம் என்பதினால் தேர்தல் முடிவடைந்த நிலையில் இது தொடர்பாக மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் கலந்தரையாடல் மேற்கொள்ளப்பட்டதன் பின் உரிய நடவடிக்கை சட்ட திட்டத்தின் கீழ் எடுக்கப்படும் என தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து மக்கள் அவ்விடத்தை விட்டு சென்றனர்.
குறித்த ஆர்ப்பாட்டத்தின் போது மன்னார் குருமுதல்வர் அன்ரனி விக்டர் சோசை,மன்னார் பிரதேச சபையின் தலைவர் மாட்டின் டயேஸ்,உப தலைவர்,உறுப்பினர்கள்,தமிழ் தேசியக்கூட்டமைப்பின் மன்னார் மாவட்ட வேட்பாளர்கள், ஆகியோர் கலந்து கொண்டு மக்களுடன் கலந்துரையாடினர்.
கடற்படைக்கு எதிராக மன்னார் சிறுத்தோப்பு கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்.-படங்கள்
Reviewed by Admin
on
September 12, 2013
Rating:
No comments:
Post a Comment