அண்மைய செய்திகள்

recent
-

தமிழ் மக்களிடம் சென்று 4 ஆவது ஈழப் போருக்கான அனுமதியினை த.தே.கூ கோரி நிற்கின்றது: றிசாத்

வடமாகாண சபை தேர்தல் குறித்து மக்கள் மத்தியில் தமிழ் கூட்டமைப்பு பிழையாக  வழி நடத்திவருகின்றது.

கிழக்கு மாகாண சபையின் ஆட்சி ஆளும் அரசாங்கத்திடம் இருக்கின்றது.அதே போன்று தான் வட மாகாணத்தின் ஆட்சியினையும் அரசாங்கம் பெறுகின்றபோது சமாந்தரமான அபிவிருத்திகளை இலகுவாக செய்ய முடியும் என்று வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும் அமைச்சருமான றிசாத் பதியுதீன்  தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இன்று காலை ஜனாதிபதி கலந்து கொண்ட  ஜக்கிய மக்கள் சுதந்திர  கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அமைச்சர் றிசாத் பதியுதீன் உரையாற்றுகையில் -

போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் துன்பப்படும் போது அப்பாவி தமிழ் மக்களிடம் சென்று 4 ஆவது ஈழப் போருக்கான அனுமதியினை தமிழ் தேசிய கூட்டமைப்பு கோரி நிற்கின்றது.

இவர்கள் கடந்த காலங்களில் மக்களுக்கு செய்தததை ஒரு போதும் இந்த மக்கள் மறந்துவிடமாட்டார்கள்.

மெனிக் பார்மில் இருந்த 3 இலட்சம் மக்களை மீள்குடியேற்ற  மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தலைமையிலான  அரசு செய்தது என்ன என்பதை இந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு புரிந்து கொள்ள வேண்டும்.

ஏனைய மாவட்டங்களை போன்று வடமாகாணமும் அபிவிருத்தி செய்ய வேண்டும் என்று அரசாங்கம் பலகோடி ரூபாய்களை செய்துவருகி்ன்றது.மக்களின் இயல்பு வாழ்க்கையினை மேம்படுத்த எம்மால் ஆன அனைத்து உதவிகளையும் இனப்பாகுபாடுகளுக்கு அப்பால் மனித நேயத்துடன் செய்துவருகின்றோம்.

கடந்த கால போராட்டத்தில் நாம் இழந்தவைகள் ஏராளம்.இந்த  போராட்டத்தில் ஈடுபட்டு எல்லாவற்றையும் இழந்த நிலையில் இன்று 12 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் புனர்வாழ்வு பெற்று சமூகத்தில் இணைக்கப்பட்டுள்ளனர்.

அழிக்கப்பட்ட அனைத்து கட்டிடங்கள் எல்லாம் இன்று புனரமைப்பு செய்யப்படுகின்றது.வவுனியாவிலிருந்து எல்ல பகுதிகளுக்குமான பாதைகள் நவீன மயப்படுத்தப்படுகின்றது.

நேர்மையான ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் அரசாங்கத்தில் மக்கள் நன்மையடைகின்றனர்.கடந்த தேர்தலில் மக்களை பிழையாக வழிநடத்தி பொய் கூறி மக்களைது வாக்குகளை அபகரித்து கடந்த தேர்தல்களில் பிரதேச சபைகளின் அதிகாரத்தை கைப்பற்றினர்.

இன்று மீண்டும் அவ்வாறு மக்கள் முன் தோன்றி மக்களை ஏமாற்றி ஈழப்போரை நடத்துவதற்கு அனுமதி தாருங்கள் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரசாரம் செய்கின்றது.இவர்களால் ஒரு போதும் ஈழப் போரினை நடத்த முடியாது மக்கள் இன்று யதார்தத்தை உணர்ந்து கொண்டனர்.

அப்பாவி இளைஞர்களை பலி கொடுத்து,அவர்களது திறமைகளை இல்லாமல் ஆக்கி அங்கவீனர்களாக மாற்றிய பெருமையினை இந்த கூட்மைப்பினரையே சாரும்.அதுமட்டுமல்லாமல் வவுனியாவில் தமிழ்-முஸ்லிம் மக்களை சீண்டி அவர்களை பிளவுபடுத்தி அதன் மூலம் இன மத மோதலை தோற்றுவிக்க முயற்சிக்கும் கட்சிகளை புறந்தள்ளி மக்கள் ஒற்றுமைக்கு வழி அமைக்க தயாராகவுள்ளனர்.

அதே போல் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வவுனியா மாவட்ட வேட்பாளர் எம்.உவைஸ் இன்று ஜனாதிபதி தலைமையிலான ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு ஆதரவு வழங்க வந்துள்ளது இங்கு பாராட்டக்  கூடியது என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்

தமிழ் மக்களிடம் சென்று 4 ஆவது ஈழப் போருக்கான அனுமதியினை த.தே.கூ கோரி நிற்கின்றது: றிசாத் Reviewed by Admin on September 12, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.