வவுனியாவில் இராணுவ குடும்பத்தினருக்கு நலனுதவித்திட்டங்கள்
இராணுவத்தில் உயிரிழந்த மற்றும் அங்கவீனமான படை வீரர்களின் உறவினர்களுக்கு நலனுதவிகள் வழங்கும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை வவுனியாவில் இடம்பெற்றது.
வவுனியாவை சேர்ந்த 99 குடும்பத்தினருக்கு இவ் உதவிகள் வழங்கப்பட்டன.
வவுனியா காமினி மகாவித்தியாலயத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வட மாகாண ஆளுனர் ஜி.ஏ.சந்திரசிறி கலந்துகொண்டு உதவிகளை வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் வவுனியா அரசாங்க அதிபர் பந்துல ஹரிச்சந்திர, 56 ஆவது படைப்பிரிவின் தளபதி பிரிகேடியர் ரணவக்க உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர்.
வவுனியாவில் இராணுவ குடும்பத்தினருக்கு நலனுதவித்திட்டங்கள்
Reviewed by Admin
on
September 16, 2013
Rating:
No comments:
Post a Comment