சிராணி நாட்டை விட்டு வெளியேற நீதிமன்றம் தடையுத்தரவு
முன்னாள் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவுக்கு அனுமதியின்றி வெளிநாடு செல்வதற்கு கொழும்பு பிரதான நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.
லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தொடுத்த வழக்கு விசாரணைகள் தொடர்பில் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் இன்று அவர் ஆஜராகியுள்ள நிலையிலேயே இத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முறைப்பாடு தொடர்பில் விடயங்களைத் தெரிவித்த, அரச சட்டத்தரணி டிலான் ரத்நாயக்க கணணி மூலமான சாட்சியங்களை முன்வைக்கவுள்ளதால், இன்றைய தினம் முன்னாள் பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை அறிவிக்கமுடியாதென குறிப்பிட்டார்.
முன்னாள் பிரதம நீதியரசர் சார்பில், இந்த வழக்கில் நூறுக்கும் அதிகமான சட்டத்தரணிகள் ஆஜராகியுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி நலின் லத்துவஹெட்டி குறிப்பிட்டார்.
இதேவேளை, தமது சங்கம் இந்த வழக்கில் ஷிராணி பண்டாரநாயக்க சார்பில் ஆஜராகியுள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் உபுல் ஜயசூரிய நீதிமன்றத்தில் அறிவித்தார்.
சிராணி நாட்டை விட்டு வெளியேற நீதிமன்றம் தடையுத்தரவு
Reviewed by Admin
on
September 16, 2013
Rating:

No comments:
Post a Comment