விடுவிக்கப்பட்ட இந்திய மீனவர்களை யாழ்பாணத்திற்கான இந்திய துணை அதிகாரி எஸ்.டி.மூர்த்தி பார்வையிட்டார்-படங்கள்
இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 41 இந்திய மீனவர்களையும் மன்னார் நீதிமன்றம் இன்று புதன் கிழமை விடுதலை செய்தது.
விடுதலை செய்யப்பட்ட குறித்த மீனவர்களை தலைமன்னார் பொலிஸார் தலைமன்னார் கடற்படையினரிடம் ஒப்படைத்தனர்.
தலைமன்னார் கடற்படையினர் குறித்த மீனவர்களை கடல் மார்க்கமாக இராமேஸ்வரத்திற்கு அழைத்துச் செல்வதற்காக தலைமன்னார் கடற்படை முகாமில் தடுத்து வைத்துள்ளனர்.
கடற்படை முகாமில் வைக்கப்பட்டுள்ள மீனவர்களை யாழ்பாணத்திற்கான இந்திய துணை அதிகாரி எஸ்.டி.மூர்த்தி சென்று பார்வையிட்டார்.
விடுவிக்கப்பட்ட இந்திய மீனவர்களை யாழ்பாணத்திற்கான இந்திய துணை அதிகாரி எஸ்.டி.மூர்த்தி பார்வையிட்டார்-படங்கள்
Reviewed by Admin
on
September 25, 2013
Rating:
No comments:
Post a Comment