ஐ.நா பொதுச் செயலாளர் பான் கீ மூனை சந்திக்கவுள்ளார் ஜனாதிபதி.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்கும் நோக்கில் ஜனாதிபதி அமெரிக்காவிற்கு புறப்பட்டுச் சென்றுள்ளார் . ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தின் 68 ம் அமர்வுகளில் ஜனாதிபதி உரையாற்றவுள்ளார் .
எதிர்வரும் 24 ம் திகதி ஜனாதிபதி உரையாற்றுவார் என தெரிவிக்கப்படுகிறது . நாட்டுத் தலைவர்களுடன் ஜனாதிபதி சந்திப்புக்களை நடாத்துவார் எனக் குறிப்பிடப்படுகிறது .
வெளிவிவகார அமைச்சர் ஜீ . எல் . பீரிஸ் , அமைச்சர்களான நிமால் சிறிபால டி சில்வா , டலஸ் அழப்பெரும , நாடாளுமன்ற உறுப்பினர்களான சஜின் வாஸ் குணவர்தன , லொஹான் ரத்வத்த , ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோர் ஜனாதிபதியுடன் நியூயோர்க் விஜயத்தில் இணைந்து கொண்டுள்ளனர் .
ஐ.நா பொதுச் செயலாளர் பான் கீ மூனை சந்திக்கவுள்ளார் ஜனாதிபதி.
Reviewed by Admin
on
September 22, 2013
Rating:

No comments:
Post a Comment