அண்மைய செய்திகள்

recent
-

வவுனியாவில் இரு குழுக்களுக்கு இடையில் மோதல்; கண்காணிப்பாளர் மீது தாக்குதல்

வட மாகாணசபைத் தேர்தல் முடிவுகள் வவுனியா மாவட்ட செயலகத்தில் அறிவிக்கப்பட்டுக்கொண்டிருந்த போது, மாவட்ட செயலகத்திற்கு முன்னால் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் தேர்தல் கண்காணிப்பாளர் ஒருவரும் பிராந்திய ஊடகவியலாளர் ஒருவரும் தாக்கப்பட்டுள்ளனர்.

இன்று காலை 9 மணியளவில் மாவட்ட செயலகத்திற்கு முன்னால் திரண்ட சுமார் 150 இற்கும் மேற்பட்டோர், அவ்விடத்தில் கூடி நின்றவேளை வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறிய போது நிலைமைகளை அவதானிப்பதற்காக அவ்விடத்துக்குச் சென்ற 'கபே' தேர்தல் கண்காணிப்பு குழுவைச் சேர்ந்த கண்காணிப்பாளர் ஒருவர் மீதும் பிராந்திய ஊடகவியலாளர் மீதும் கைகலப்பில் ஈடுபட்டவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதன் காரணமாக கண்காணிப்பாளரான ரி. ரஜீபன் மற்றும் ஊடகவியலாளரான எஸ். எம். சர்ஜான் ஆகியோர் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த கலகம் அடக்கும் பொலிஸார், அங்கு கூடி நின்றவர்களை அங்கிருந்து அகற்றி மாவட்ட செயலக சூழலை சுமூகமான நிலைக்கு கொண்டுவந்தனர்.  இதற்கிடையே, கபே அமைப்பினர் இச்சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்த கபே அமைப்பின் தேசிய அமைப்பாளர் அகமட் மனாப், 'தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுக்கொண்டிருந்த சமயம் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பை சேர்ந்த ஆதரவாளர்களும் முஸ்லீம் காங்கிரஸ் ஆதரவாளர்களுமாக 150 இற்கும் அதிகமானோர் மாவட்ட செயலகத்திற்கு முன்னால் கூடியிருந்தனர்.

இந்நிலையை பக்கச்சார்பற்ற நிலையில் நாம் வதானித்துக்கொண்டிருந்த சமயம் எம்மை நோக்கி வந்த சிலர் எமது காண்காணிப்பாளர் மற்றும் பிராந்திய ஊடகவியலார் மீது தாக்குதலை நடத்தினர். இச்சம்பவத்தை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்' என தெரிவித்தார்.


வவுனியாவில் இரு குழுக்களுக்கு இடையில் மோதல்; கண்காணிப்பாளர் மீது தாக்குதல் Reviewed by Admin on September 22, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.