அண்மைய செய்திகள்

recent
-

உரிமைக்கான மாபெரும் ஆணையை வழங்கிய மக்களுக்கு நன்றி: சிவசக்திஆனந்தன்

மாபெரும் மனித அவலங்களின் பின்னர் எமது மக்கள் விழித்தெழுந்த இந்நாள் தமிழர் வரலாற்றின் பொன்னாள். யுத்தம் ஓய்வுக்கு வர, மனிதாபிமான மீட்பு நிறைவேற்றப்பட்டதாகப் பறைசாற்றிய அரசு எமது அரசியல் உரிமையைக் கொச்சைப்படுத்தியதுடன், இருப்பதை வைத்து மாகாணஅரசைப் பார்த்துக் கொள்ளுங்கள் என்கின்றது. பதின்மூன்றாவது திருத்தச்சட்டத்தின் மூலமான, வடக்கு -கிழக்கிற்கான அதிகாரப்பகிர்வைக்கூட உதாசீனப்படுத்திவிட்டனர் . என்று வடமாணசபை தேர்தல் வெற்றிக்கு நன்றி தெரிவித்து வெளியிட்ட ஊடக அறிக்கையில் வன்னிமாவட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமனற உறுப்பினர் ந. சிவசக்கி ஆனந்தன்; தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவரது அறிக்கையில்; மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது

அரசாங்க வளங்கள் சமுர்தர்தி நிவாரணம் அதிகார துஸ்பிரயோகம் முதலான அரசின் அனைத்து பலப்பிரயோகங்களையும் அச்சுறுத்தல்களையும் புறம்தள்ளி, இராணுவத் தடுப்புக்களையும் மீறிக் கட்டுக்கடங்காத சமுத்திரமாய் மக்கள் வாக்களிப்பில் கலந்து கொண்டு மூன்றில் இரணடிற்கும் பெரும்பான்மையைப் பெற்று தங்களைத் தாங்களே நிர்வகிக்கும் ஒரு மாகாண அரசை உருவாக்கியுள்ளனர்.

எமக்கான அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வு எமக்குள்ளேயே காணப்படுவதாலும் இறுதிக்கட்டப் போரில் சர்வதேச நாடுகளால் கைவிடப்பட்ட எமது மக்கள் தமது சொந்தப்பலத்தின் மூலமே அரசியல் தீர்வு பெறவும் பலம் பொருந்தியதொரு மாகாண அரசை நிறுவி சர்வதேசத்தின் முன்னால் சமர்ப்பித்துள்ளனர்.

தமிழ்த்; தேசிய கூட்டமைப்புக்குவழங்கப்பட்ட மக்கள் ஆணை என்பது அவர்கள் மீது அதிகாரம் செலுத்துவதற்காக அல்ல. மககளுக்குப்; பணி செய்வதற்காகவே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதனை ஏற்று அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்து எமது பிரதேசத்தின் வளத்தைக் கட்டியெழுப்ப ஆவன அணைத்தும் மேற்கொள்ளப்படும்.

அத்துடன் மக்கள் பலத்துடன் உரிமைகளை வெல்வதுடன் அதற்காக, நிலவும் ஜனநாயக வழிகள் அனைத்தையும் பிரயோகிப்பதுடன் மாகாணத்தின் பொருளாதார உட்கட்டுமான மற்றும் சமூகநலன் சார்ந்த

அபிவிருத்திகளையும் முன்னெடுத்துச் செல்வோம் இத் தேர்தலின் மாபெரும் வெற்றிக்காக உழைத்த, வாக் களிப்பினை ஊக்குவித்த அனைத்து உறவுகளுக்கும் உள்நாட்டு இசர்வதேச ஊடகத் துறை மற்றும் சமூக வலையமைப்புக்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம் .

ந.சிவசக்திஆனந்தன்

வன்னிமாவட்டபாராளுமன்ற உறுப்பினர்,

வவுனியா மாவட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்

உரிமைக்கான மாபெரும் ஆணையை வழங்கிய மக்களுக்கு நன்றி: சிவசக்திஆனந்தன் Reviewed by Admin on September 23, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.