வேட்பாளர்கள் தொடர்ந்தும் புலனாய்வாளர்களால் அச்சுறுத்தல்-எஸ்.வினோ நோகராதலிங்கம் எம்.பி
இவ்விடயம் தொடர்பாக கட்சித் தலமைகள் மற்றும் தேர்தல்கள் திணைக்களம், சுயாதீனக் கண்காணிப்பு அமைப்புக்களுக்கும் தான் அறிவித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,,,
முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அவர்களுடைய ஆதரவாளர்களுடைய வீடுகளுக்குச் செல்லும் புலனாய்வுத்துறையினர் அவர்களை அச்சுறுத்தி வருகின்றனர்.
அதே போன்று அரச கட்சிகள் பிரச்சாரக் கூட்டங்கள் நடாத்துவதற்கு அனுமதி கொடுக்கும் அவர்களுக்கு பொலிஸார் பாதுகாப்பினையும் வழங்குகின்றனர்.
ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்கள் பிரச்சாரக் கூட்டங்கள் நடாத்துவதற்கு பொலிஸார் தடைவிதித்து வருகின்றனர்.
இவ்வாறான விடயங்கள் தொடர்பாக வேட்பாளர்கள் நாளுக்கு நாள் நடைபெறும் சம்பவங்கள் தொடர்பாக எனக்குத் தெரியப்படுத்தியுள்ளனர்.
இதனால் அவர்கள் சுயாதீனமாக பிரச்சாரம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
வேட்பாளர்கள் தொடர்ந்தும் புலனாய்வாளர்களால் அச்சுறுத்தல்-எஸ்.வினோ நோகராதலிங்கம் எம்.பி
Reviewed by Admin
on
September 11, 2013
Rating:

No comments:
Post a Comment