இந்திய மீனவர்களை எதிரிகளாய் பார்க்க வேண்டாம்.அமைச்சர் பா.டெனிஸ்வரன்
இந்திய மீனவர்கள் கடல் எல்லை தெரியாமலே எமது கடற் பிரதேசங்களுக்குள் வருகின்றார்களே தவிர அவர்கள் எமது வளங்களை அழிப்பதற்காக வரவில்லை.
ஆகவே அவர்களை எதிரிகளாகப் பார்க்க வேண்டாம் என வடமாகாண மீன் பிடி,போக்குவரத்து,கைத்தொழில்,வர்த்தகம்,வாணிபம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தினரை நேற்று ஞாயிற்றக்கிழமை(13-10-2013) சந்தித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,,,,,
'நடைபெற்று முடிந்த வடமாகாண சபைத் தேர்தல் பிரசாரங்களில் எங்கள் எல்லோரின் பேச்சுப் பொருளாக முல்லைத்தீவின் முள்ளிவாய்கால் இருந்திருக்கின்றது.
யுத்தத்தினால் அதிகமாகப் பாதிக்கப்பட்ட பிரதேசமான முல்லைத்தீவினை அபிவிருத்திப் பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும்.
இந்த மாவட்டத்தில் வாழ்கின்ற இளைஞர்கள், யுவதிகள் நாங்கள் மேற்கொள்ளும் அபிவிருத்தி நடவடிக்கைக்கு தங்கள் பங்களிப்பினை வழங்க வேண்டும்.
வடமாகாண சபை நிதியில் ஒருசதம் கூட இல்லாத நிலையில் நாங்கள் அதனை பொறுப்பேற்றுள்ளோம். இம்மாகாணத்தினை ஏனைய மாகாணங்களை விட ஒரு முதன்மை மாகாணமாக மாற்றுவதற்கு இராஜதந்திர ரீதியில் சில நகர்வுகளை நாங்கள் மேற்கொண்டு, வெளிநாடுகளிலிருந்து நிதியினை பெறவேண்டும்.
இந்தியா வட மாகாணத்திற்கு பெரும் பாங்காற்றும் என உறுதிமொழி அளித்துள்ளது.
இந்த நம்பிக்கையில் எங்கள் மக்களின் வாழ்வை மேம்படுத்த முடியும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
அத்துடன் முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெற்ற கடற்கொந்தளிப்பால் பாதிக்கப்பட்ட கடற்தொழிலாளர்களிற்கு நஸ்ட ஈடு வழங்குவது தொடர்பில் வடமாகாண சபையினால் நடவடிக்கை எடுக்கப்படும்' என அவர் மேலும் தெரிவித்தார்.
இந்திய மீனவர்களை எதிரிகளாய் பார்க்க வேண்டாம்.அமைச்சர் பா.டெனிஸ்வரன்
Reviewed by Admin
on
October 14, 2013
Rating:
No comments:
Post a Comment