அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் விவசாயிகளுக்கு பழப்பயிர்கள் வினியோகம்- படங்கள்


பழப்பயிர் அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டத்தின் ஊடாக பழபயிர்களை விவசாயிகளுக்கு வழங்கி வைக்கும் நிகழ்வு மன்னார் பிரதி விவசாய பணிப்பாளர் P.அற்புதச்சந்திரன் தலைமையில் மன்னார் வண்ணமோட்டை  மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில் இன்று காலை நடைபெற்றது.

இன் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட செயலாளர் திரு .எம்.வை.எஸ்.தேசபிரிய கலந்து கொண்டு விவசாயிகளுக்கு பழபயிர்களை வழங்கி வைத்தார்.

இன் நிகழ்வில் மன்னார்,மாந்தை மேற்கு,மடு ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட 35 பயனாளிகளுக்கு பழப்பயிர் ஆராய்ச்சி நிலையம் கற்பிட்டியில் இருந்து தருவிக்கப்பட்ட  நிமாலி இன வகையை சேர்ந்த 12500  மாதுளை பழப்பயிர்கள் வழங்கிவைக்கப்பட்டது.


இதன்மூலம் 25 கெக்டயர்   நிலப்பரப்பில் பழப்பயிர் செய்கையை மேற் கொள்ள விவசாயிகளுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை மாந்தை மேற்கு,மடு பிரேதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட 36 விவசாயிகளுக்கு கொரண பழப்பயிர் ஆராய்ச்சி  நிலையத்தில் இருந்து பலா பழப்பிர்கள் 9000 தருவிக்கப்பட்டு விரைவில் விவசாயிகளுக்கு வழங்கப்படவுள்ளது.

இன்நிகழ்வில் மன்னார் பிரதி விரிவாக்கல் விவசாய பணிப்பாளர் திரு.எஸ்.எப்.சி.உதயசந்திரன் ,கே.மதன்ராஜ் குலாஸ், அரச உயர் அதிகாரிகள் மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டனர்.


லுயிஸ் மார்சல் 



















மன்னாரில் விவசாயிகளுக்கு பழப்பயிர்கள் வினியோகம்- படங்கள் Reviewed by Admin on October 14, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.