மன்னார் நானாட்டான் பொன்தீவு கண்டல் கிராமத்தில் அரசியல் ரீதியாக அத்துமீறிய மீள் குடியேற்றம் செய்ய நடவடிக்கை .தடுத்து நிறுத்துமாறு மக்கள் கோரிக்கை.
மன்னார் நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட கத்தோலிக்க கிராமமான பொன்தீவு கண்டல் கிராமத்தில் அரசியல் ரீதியாக வேற்று மத மக்களை குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகள் இடம் பெற்று வருவதாக குறித்த கிராம மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
இவ்விடயம் தொடர்பாக குறித்த கிராம மக்களின் பிரதி நிதிகள் நேற்று புதன் கிழமை (23-10-2013) மாலை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபருக்கு மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர்.
குறித்த மகஜரில் மேலும் குறிப்பிடுகையில்,,,
1866 ஆம் ஆண்டு மூன்று குடும்பங்களுடன் குடியேற்றம் செய்யப்பட்ட கிராமம் பொன்தீவு கண்டல் கிராமமாகும்.பூதத்தின் பொற்பேளை இத்தீவில் இருப்பதால் இக்கிராமம் பொன்தீவு கண்டல் என பெயர் பெற்றது.
இத்தீவானது எமது கிராமத்தை அண்டிய தீவாகவும் எம் மக்கள் இத்தீவில் வசித்ததற்கான ஆதாரமும் எம்மிடம் உள்ளது.
தற்போது எமது சமூகம் பரந்து விரிந்து இனமும் பெருகி உள்ளது.எமது மக்களுக்கு காணிகள் இல்லாத நிலையில் இத்தீவை நாம் மீண்டும் புதுப்பித்து காணிகளை வழங்குவதன் மூலம் இக்கிராமத்தை இன்னும் பெருப்பிக்க எண்ணியுள்ளோம்.
ஆனால் ஏறத்தாள 80 குடும்பங்களைக் கொண்ட இக்கிராமம் 100 வீதம் கத்தோலிக்க மக்களைக் கொண்டதாகும்.
ஆனால் இக்கிராமத்திற்குச் சொந்தமான இக்காணியில் வேறு இன மக்களுக்கு கொடுத்து அவர்களை குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகள் அரசியல் ரீதியாக இடம் பெற்று வருகின்றது.
இதனால் இக்கிராமத்தைச் சேர்ந்த மக்களுக்கு காணிகள் அற்ற நிலை ஏற்படும்.அதுமட்டும் இன்றி எமது பொது தேவைகளுக்காகவும்,குழந்தை யேசு கோவில் அமைப்பதற்காகவும்,அனாதை இல்லம் அமைப்பதற்கும் நாம் ஆலோசித்து வருகின்றோம்.
இந்த வகையில் மக்களுக்கடையில் இனவாதத்தை தூண்டுவதற்கான ஒரு செயற்பாடாக இதனை நாம் கருதுகின்றோம்.இந்த செயற்பாடு எம் மக்களை ஆழ்ந்த கவலைக்குள்ளாக்கியுள்ளது.
எனவே இந்த குடியேற்றத்தை உடனடியாக தடுத்து நிறுத்தி இக்காணிகளை அக்கிராமத்தைச் சேர்ந்த மக்களுக்கு வழங்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகின்றோம்.என குறிப்பிடப்பட்டுள்ளது.
மன்னார் நானாட்டான் பொன்தீவு கண்டல் கிராமத்தில் அரசியல் ரீதியாக அத்துமீறிய மீள் குடியேற்றம் செய்ய நடவடிக்கை .தடுத்து நிறுத்துமாறு மக்கள் கோரிக்கை.
Reviewed by Admin
on
October 25, 2013
Rating:

No comments:
Post a Comment