மன்னார் நகர சபைக்குற்பட்ட ஜிம்பிறவுன் நகர்(இருதய புரம்) கிராம மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காணுமாறு கோரி மன்னார் மாவட்ட மீனவ ஒத்துழைப்பு பேரவை மன்னார் நகர சபையின் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம் அவர்களிடம் இன்று வெள்ளிக்கிழமை காலை மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர்.
குறித்த கிராம மக்களின் பிரதிநிதிகளுடன் இணைந்து மன்னார் மாவட்ட மீனவ ஒத்துழைப்பு பேரவையின் இணைப்பாளர் எஸ்.சுனேஸ் சோசை குறித்த மகஐரை வழங்கி வைத்துள்ளார்.
குறித்த மகஜரில் மேலும் குறிப்பிடுகையில்,,,,,
மன்னார் நகர சபைக்குற்பட்ட ஜிம்பிறவுன் நகர் கிராமத்தில் 2007ம் ஆண்டு முன்னைய நாள் மன்னார் பிரதேச செயலாளர் ஸ்ரான்லி டிமேல் அவர்கள் மக்களுக்கு இக் காணிகளை வழங்கியுள்ளார்.
ஒரு நபருக்கு 15 தொடக்கம் 20 வரையிலான பேச் நிலப்பரப்பு கொடுக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இவ்விடத்தில் 100 குடும்பங்கள் வரை கடந்த 06 வருடகாலமாக மழை நீரிலும், வெள்ளத்திற்குள்ளும் வாழ்ந்து வருகின்றனர்.
அன்றில் இருந்து இன்று வரைக்கும் எவ்விதமான அடிப்படை வசதிகளை அரசாங்கமோ அல்லது பிரதேச செயலகமோ அல்லது நகரசபையோ மக்களின் அடிப்படை பிரச்சினைகளை தீர்ப்பதற்கான எந்த நடவடிக்கைகளையும் எடுக்க வில்லை.
இது தொடர்பாக பல்வேறுப்பட்ட கடிதங்களை உரிய தரப்பிற்கு வழங்கியுள்ளதாகவும் இதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியும் இன்று வரை எவ்விதமான சாதகமான பதிலும் எமக்கு கிடக்க வில்லை .
இன்று இக் கிராமத்தில் 100 குடும்பங்கள் 500 ற்கும் மேற்பட்ட நபர்களுடனும் 150 ற்கும் மேற்பட்ட பாடசாலை மாணவ மாணவிகளும் 80 மேற்பட்ட பாலர் பாடசாலை மாணவ மாணவிகளும் எமது கிராமத்தில் இருந்து நடந்தும் சிலர் துவிச்சக்கர வண்டிகளிலும் இன்னும் பலர் ஒரு மாதத்திற்கு 1000 ரூபா பணம் செலவழித்தும் குறிப்பாக (பாலர் பாடசாலை பிள்ளைகள்) பாடசாலைக்கு செல்லுகின்றார்கள்.
இருந்தம் கூட மழை காலத்தில் எல்லா பிள்ளைகளும் சப்பாத்தினை காலில் அணிய எமது பிள்ளைகள் மாத்திரம் கையில் ஏந்திக் கொண்டு போகும் நிலையை எத்தனை அதிகாரிகள் கண் கூடாக பார்த்திருப்பீர்கள்.
மக்காளாகிய நாம் அதிகாரிகளிடம் கேட்கின்றோம் இதற்கு என்ன பதில் சொல்லப் போகின்றீர்கள். வருடா வருடம் பெய்கின்ற மழைக்கு நாங்கள் இடம் பெயர்ந்து செல்லுகின்றோம் .
வீதிகள் எல்லாம் மூடப்பட்ட நிலையில் காணப்படுகின்றது. பாடசாலை மாணவ மாணவிகள் பாடசாலைக்கு செல்ல முடியாத நிலை அதிகாரிகள் வருகை தந்து பார்க்க முடியாத நிலை இது மட்டுமல்ல.
இன்னும் பல பிரச்சினைகள் உள்ளது. எமது கிராமத்திற்காண வீதிகள் சரியான முறையில் செப்பனிடுதல் வேண்டும்,சரியான முறையில் வடிகால் அமைப்பினை எமது கிராமத்தினுள் அமைக்க வேண்டும்,தெரு விளக்குகள் பொருத்தப்பட வேண்டும்,மின்சாம் இல்லாமல் 50 குடும்பத்திற்கு மேல் உள்ளார்கள் அவர்களுக்கு மின்சாரம் பெற்றுக் கொடுக்க வேண்டும்,குடி நீர் வசதிக்களை செய்து கொடுக்கப்பட வேண்டிய நிலையில் கிராமத்தில் காணப்படும் 6 உள்ளக வீதிகளில் தற்போது 4 வீதிகளுக்கு மாத்திரம் தான் பூரணப்படுத்தப்பட்டுள்ளது.
ஏனையவை விடுபட்டுள்ள நிலையில் இவ் வேலைதிட்டம் பூரணப்படுத்தப்பட வேண்டும்,மலசலக் கூட வசதி இல்லாமை போன்ற பல்வேறு பிரச்சினைகள் இக்கிராமத்தில் நிலவுகின்றது.
இது போன்ற பிரச்சினைகளுக்கு மக்களாகிய நாம் அன்றாடம் முகம் கொடுத்துக் கொண்டு வருகின்றோம்.
நாங்கள் 'கொங்கீறிட் வீதி' அல்லது தார் வீதி வேண்டும் என்று கேட்கவில்லை .
மாறாக தற்போது இருக்கின்ற செம்மண் வீதியை மண் போட்டு உயர்த்தி தாருங்கள் என்று தான் கேட்கின்றோம்.
நாங்களும் எமில் நகர் கிராம அதிகாரியின் பதிவிற்குள் தான் இருக்கின்றோம் .
எமில் நகருக்கு கொங்கீறிற் வீதிகள் 4 அமைக்கும் உங்களுக்கு எமது வீதியினை புனரமைப்பு செய்ய முடியாதா? என மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
எல்லா அபிவிருத்தி திட்டத்திலும் எமது மக்களும் கிராமமும் புறம் தள்ளி விடுவதற்கான காரணம் என்ன?
இப்படி ஒரு கிராமம் இருக்கின்றது என்பதாவது தெரியுமா? கடைசியாக சென்ற வருடம் மழையின் காரணமாக மக்கள் இடம் பெயர்ந்த வேளையில் மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அதிகாரி முஹமட் றியாஸ் மழை தண்ணீரை சேமிப்பதற்கான வசதியினை ஏற்படுத்திதருவதாக கூறி சென்றவர் இன்னமும் அதனை கொண்டு தர வில்லை .
இது எல்லாம் மக்களை முட்டாள் ஆக்கும் வேலையா? என மக்கள் கேட்கின்றனர். இவைகள் அனைத்தும் மக்களால் முன் வைக்கப்பட்ட பிரச்சினைகளாக காணப்படுகின்றது.
எனவே குறித்த கிராம மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளுக்கு உடனே உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மன்னார் மாவட்ட மீனவ ஒத்துழைப்பு பேரவையினரின் சார்பாக கேட்டுக் கொள்ளுகின்றோம்.என குறித்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment