காணாமல் போனோர் விவரங்களை பதிவு செய்த வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு தலைவர் மீது இனந்தெரியாதோர் தாக்குதல்
வவுனியா மாவட்டத்தில் காணாமல் போனோர் தொடர்பான விவரங்களை வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு கடந்த ஒருவார காலமாக பதிவு செய்து வருகின்றது.
வவுனியா வடக்கில் மட்டும் இதுவரை நூற்றுக்கும் மேல்பட்ட முறைப்பாடுகள் காணாமல் போனவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்களால் பதிவு செய்யப்பட்டுள்ளன.
வவுனியா வடக்கு நெடுங்கேணி பகுதியில் காணாமல் போனோர் தொடர்பான விவரங்களை பதிவு செய்து கொண்டிருந்த வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு தலைவர் கிருஸ்ணபிள்ளை தேவராசா மீது நேற்று இனந்தெரியாதோர் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் இருவர் அவர் பதிவினை மேற்கொண்டிருந்த வர்த்தக நிலையத்துக்குள் புகுந்து சரமாரியாக தாக்கி விட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக நெடுங்கேணி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
காணாமல் போனோர் விவரங்களை பதிவு செய்த வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு தலைவர் மீது இனந்தெரியாதோர் தாக்குதல்
Reviewed by Admin
on
October 27, 2013
Rating:

No comments:
Post a Comment