மன்னார் பிரதேச சபைக்கு சொந்தமான காணியில் உயிலங்குளம் பொலிஸ் நிலையம் அமைப்பதற்கு காணி வழங்க நடவடிக்கை-கிராம மக்கள் எதிர்ப்பு.
மன்னார் மதவாச்சி பிரதான வீதி உயிலங்குளம் உப தபால் நிலையத்திற்கு முன்பாகவுள்ள மன்னார் பிரதேச சபைக்குச் சொந்தமான காணியினை பொலிஸ் நிலையம் அமைப்பதற்கு பிரித்துக் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மன்னார் பிரதேச சபையின் உப தலைவர் அந்தோனி சகாயம் தெரிவித்துள்ளார்.
யுத்த சூழ்நிலையின் காரணமாக குறித்த காணி நீண்ட காலமாக
உயிலங்குளம் பொலிஸ் நிலையாமாக காணப்பட்டது.
குறித்த காணியில் பல்வேறு அரச திணைக்களங்களின் கட்டிடங்களும்,மன்னார் பிரதேச சபைக்கான கட்டிடங்களும் காணப்பட்டது.
சகல கட்டிடங்களையும் விட்டு பொலிஸார் வெளியேறியுள்ள நிலையின் மன்னார் பிரதேச சபைக்குச் சொந்தமான கட்டிடம் குறித்த காணியில் இருந்த நிலையில் மன்னார் பிரதேச சபையின் அனுமதியுடன் 6 மாத ஒப்பந்தத்துடன் குறித்த கட்டிடத்தினுள் பொலிஸார் இருந்துள்ளனர்.
பல தடவைகள் ஒப்பந்தம் மன்னார் பிரதேச சபையினால் புதுப்பித்துக்கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று(24-10-2013) காலை திடீர் என மன்னார் பிரதேச செயலகத்தின் நில அளவை அதிகாரிகள் உயர் அழுத்தங்களுக்கு மத்தியில் குறித்த காணிக்குச் சென்று மன்னார் பிரதேச சபைக்குச் சொந்தமான காணியினை பிரித்து பொலிஸ் நிலையம் அமைக்க வழங்குவதற்காண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
இதற்கு உயிலங்குளம் மக்களும்,மன்னார் பிரதேச சபையின் உப தலைவராகிய நானும் சம்பவ இடத்திற்குச் சென்று எதிர்ப்புத் தெரிவித்தோம்.
எங்களுடன் அங்கிருந்த அதிகாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் மன்னார் பிரதேச சபையின் தலைவர் மட்டீன் டயேஸ் சம்பவ இத்திற்கு வந்தார்.எனினும் அக்கிராமத்தைச் சேர்ந்த மக்கள் குறித்த காணியில் பொலிஸ் நிலையம் அமைப்பதற்கு வழங்க வேண்டாம் என மன்னார் பிரதேச சபையின் தலைவரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேறு திணைக்களங்களை அவ்விடத்தில் அமைக்க அந்த மக்கள் ஒத்துழைப்பு வழங்குவதாகவும் தெரிவித்துள்ளனர்.இந்த நிலையில் நில அளவைகள் உடனடியாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
மன்னார் பிரதேச சபைக்கு சொந்தமான காணியில் உயிலங்குளம் பொலிஸ் நிலையம் அமைப்பதற்கு காணி வழங்க நடவடிக்கை-கிராம மக்கள் எதிர்ப்பு.
Reviewed by Admin
on
October 24, 2013
Rating:
Reviewed by Admin
on
October 24, 2013
Rating:
.jpg)

No comments:
Post a Comment