வன்னித் தொண்டராசிரியர்களின் கொடுப்பனவுகள் குறைப்பு பாதிக்கப்பட்டவர்கள் அதிருப்தி
வன்னித் தொண்டராசிரியர்களின் மாதாந்த சம்பளம் 10 ஆயிரம் ரூபாவிலிருந்து 6 ஆயிரம்
ரூபாவாகக் குறைக்கப்பட்டுள்ளது .
வன்னியில் பல வருடங்களாக எந்தவித வேதனமும் இன்றி தொண்டராசிரியர்களாகப் பணி புரிந்தவர்கள் தமக்கான நிரந்தர நியமனங்களை வழங்குமாறு பல தரப்பினரிடம் கோரிக்கைகளை விடுத்துப் பல போராட்டங்களை மேற்கொண்டதையடுத்து கடந்த ஜூன் மாதம் சுமார் 500 வரையான தொண்டராசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட்டதுடன் இவர்களின் மாதாந்த சம்பளம் 6 ஆயிரம் ரூபா வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டபோதிலும் பலரின் கோரிக்கைக்கு அமைவாக 10 ஆயிரம் ரூபா சம்பளமாக வழங்கப்பட்டு வந்தது .
இந்நிலையில் தற்போது ஐப்பசி மாதத்திற்கான சம்பளமாக 6 ஆயிரம் ரூபா வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் தாம் பெரும் சிரமங்களை எதிர்கொள்ளவேண்டியதாகவும் தொண்டர் ஆசிரியர்கள் கவலை தெரிவித்துள்ளனர் .
இதனையடுத்து இச்சம்பள விடயம் தொடர்பில் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சத்தியசீலன் தெரிவிக்கையில் ,
தொண்டர் ஆசிரியர்களின் மாதாந்தக் கொடுப்பனவு 6 ஆயிரம் ரூபா எனத் தெரிவிக்கப்பட்ட போதும் பலரின் வேண்டுகோளுக்கு அமைவாக மூன்று மாதத்திற்கான அனுமதி மூலமே 10 ஆயிரம் ரூபா வழங்கப்பட்டது . மேலும் அனுமதி கிடைத்தால் மாத்திரமே 10 ஆயிரம் ரூபா வழங்கமுடியுமென தெரிவித்தார் .
வன்னித் தொண்டராசிரியர்களின் கொடுப்பனவுகள் குறைப்பு பாதிக்கப்பட்டவர்கள் அதிருப்தி
Reviewed by Admin
on
October 13, 2013
Rating:

No comments:
Post a Comment