முல்லைத்தீவு மாவட்டத்தில் நுகர்வோர் உரிமைகளை மதிக்காத வர்த்தகர்களுக்கு எதிராக நடவடிக்கை.
முல்லைத்தீவு மாவட்டத்தில் பல்வேறு பிரதேசங்களில் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தைக்
கடைப்பிடிக்காது பொருட்களை விற்பனை செய்த 12 வர்த்தகர்களுக்கு 80 ஆயிரம் ரூபா அபராதம் விதித்து முல்லைத்தீவு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது .
முல்லைப் பகுதியில் பொதுச் சுகாதார பரிசோதகர்களினால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின்போது விலைப்பட்டியல் காட்சிப்படுத்தாமை , விலை கூட்டி பொருளை விற்றமை , பாவனைக்குதவாத பொருட்களை விற்பனை செய்தமை போன்ற குற்றத்தின் அடிப்படையில் 12 வர்த்தகர்கள் முல்லைத்தீவு நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர் .
விசாரித்த முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா 12 வர்த்தகர்களுக்கும் 80 ஆயிரம் ரூபா அபராதம் விதித்துத் தீர்ப்பளித்துள்ளார் .
முல்லைத்தீவு மாவட்டத்தில் நுகர்வோர் உரிமைகளை மதிக்காத வர்த்தகர்களுக்கு எதிராக நடவடிக்கை.
Reviewed by Admin
on
October 13, 2013
Rating:
.jpg)
No comments:
Post a Comment