அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் நகர சபையின் அரச தரப்பு உறுப்பினர் பிணையில் செல்ல அனுமதி

மன்னார் பள்ளிமுனை ஆலய நிர்வாக சபை செயலாளரான லக்ஸ்மன் பிகிராடோ தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட மன்னார் நகர சபையின் அரச தரப்பு உறுப்பினரை மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் நேற்று புதன் கிழமை பிணையில் செல்ல அனுமதித்தார். 


 கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை மன்னார் பள்ளிமுனை பிரதான வீதியில் வைத்து பள்ளிமுனை ஆலய நிர்வாக சபை செயலாளரான லக்ஸ்மன் பிகிராடோ (வயது-29) மன்னார் நகர சபையின் அரச தரப்பு உறுப்பினரான எஸ்.டிலான் என்பவரினால் கடுமையாக தாக்கப்பட்டார். கடும் தாக்குதல்களுக்கு உள்ளான லக்ஸ்மன் பிகிராடோ மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். 

இவருடைய தாக்குதல் தொடர்பாக மன்னார் பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டை தொடர்ந்து பொலிஸார் வழக்கு பதிவு செய்து குறித்த நபரை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று புதன் கிழமை மதியம் குறித்த அரச தரப்பு நகர சபை உறுப்பினர் மன்னார் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தார். 

மன்னார் பொலிஸார் அவரை நேற்று மதியம் மன்னார் நீதிமன்றத்தில ஆஜபடுத்தினர். இதன் போது நகர சபை உறுப்பினர் சார்பாக ஆஜரான சட்டத்தரணிகளின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் குறித்த நபரை 10 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பிணையிலும்,15 ஆயிரம் ரூபாய் பெறுமதியான சரிர பிணையிலும் செல்ல அனுமதித்தார்.
மன்னார் நகர சபையின் அரச தரப்பு உறுப்பினர் பிணையில் செல்ல அனுமதி Reviewed by Admin on October 03, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.