அண்மைய செய்திகள்

recent
-

யாழ்.பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயத்தில் கொள்ளை

யாழ். பொன்னாலை வரதராஜா பெருமாள் ஆலயத்தில் சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியான தங்க நகை உள்ளிட்ட பொருட்கள் புதன்கிழமை (2) இரவு கொள்ளையடிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 


 ஆலயத்திலிருந்த 150 பவுண் நகைகள், வெள்ளிப்பொருட்கள் மற்றும் இரண்டு உண்டியல்களிலிருந்த பணம் உள்ளிட்ட பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது, மேற்படி ஆலயத்தின் குருக்கள் வியாழக்கிழமை (3) காலையில் பூஜை செய்வதற்காக வந்தவேளை மூலஸ்தானத்திற்கு அருகிலுள்ள அறையில் வைக்கப்பட்டிருந்த இரும்பு பெட்டி உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அப்பகுதி மக்களுக்கு தகவல் வழங்கியுள்ளார். 

 இதன்போதே மேற்படி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் தெரியவந்துள்ளது. இது தொடர்பில் வட்டுகோட்டைப் பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டதினைத் தொடர்ந்து மேலதிக விசாரணையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
யாழ்.பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயத்தில் கொள்ளை Reviewed by Admin on October 03, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.