மாநாட்டை புறக்கணித்தால் இந்தியா தனிமைப்படுத்தப்படும்
இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டை இந்தியா பிறக்கணித்தால் தனிமைப்படுத்தப்படும் என்று இலங்கை தூதர் பிரசாத் கரியவாசம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
காமன்வெல்த் மாநாட்டை இந்தியா முற்றிலும் புறக்கணிக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் இன்று கொண்டு வந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது.
இதனையடுத்து மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறுகையில் தமிழக மக்களின் உணர்வுகளை மதித்து பிரதமர் நல்ல முடிவு எடுப்பார் என்றார்.
இதனிடையே இன்று தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த இலங்கை தூதர் பிரசாத் கரியவாசம் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் தமிழர்களின் தற்போதைய நிலை குறித்து எதுவும் கூறப்படவில்லை.
பிரதமர் மன்மோகன்சிங் வருகை குறித்து இந்திய அரசு தான் முடிவு செய்யும். பிரதமர் பங்கேற்காமல் தவிர்த்தால், அதனால் ஏற்படப்போகும் விளைவுகள் குறித்து பரிசிலீப்போம் என்றார்.
மேலும் காமன்வெல்த் மாநாட்டினை தவிர்த்தால் சர்வதேச சமூகத்தில் இருந்து இந்தியா தனிமைப்படுத்தப்பட்டு விடும் என்று பிரசாத் கரியவாசம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மாநாட்டை புறக்கணித்தால் இந்தியா தனிமைப்படுத்தப்படும்
Reviewed by Author
on
October 24, 2013
Rating:
Reviewed by Author
on
October 24, 2013
Rating:

No comments:
Post a Comment