போலி கடனட்டைகளில் ரூ.17 இலட்சம் கொள்ளை: ஐவர் கைது
தெஹிவளை, ஆபோன்சு மாவத்தையிலுள்ள வீட்டில் வைத்தே குறித்த நபர்களை பொலிஸார் சந்தேகத்தின் பேரில் இன்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்துள்ளனர்.
அவர்களிடமிருந்து போலி கடனட்டைகள் 500, கடனட்டை விபரங்களை அடங்கிய மென்பொருள் ஆகியவற்றையும் கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வெளிநாட்டு கணக்குகளிலேயே அவர்கள் கூடுதலாக பணத்தை மீள எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
24 வயதிற்கும் 40 வயதிற்கும் இடைப்பட்ட இவர்கள் யாழ்ப்பாணம், கொட்டாஞ்சேனை மற்றும் ராஜகிரிய போன்ற பகுதிகளை வதிவிடமாக கொண்டவர்கள் என்றும் அடிக்கடி வெளிநாடுகளுக்கு சென்று வருபவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
போலி கடனட்டைகளில் ரூ.17 இலட்சம் கொள்ளை: ஐவர் கைது
Reviewed by Author
on
November 18, 2013
Rating:
.jpg)
No comments:
Post a Comment