அண்மைய செய்திகள்

recent
-

புத்தளம் VESDA இளைஞர் சங்கத்தின் 8வது ஆண்டின் முதலாவது கூட்டம் சிறப்பாக இடம் பெற்றது

புத்தளம் VESDA இளைஞர் சங்கத்தின் 8வது ஆண்டின் முதலாவது கூட்டம் 13-11-2013 இஷா தொழுகையைத் தொடந்து புத்தளம் மன்னார் வீதி முஹிதீன் நகர் பள்ளி வாசலில் இடம் பெற்றது.

இக் கூட்டத்தில் 8வது ஆண்டிற்கான நிர்வாக தெரிவு நடைபெற்றது .

தலைவர் : முனவ்பர் எம் றிஸ்வாத் 
உப தலைவர் : எம்.டி.முகமட் பர்சாத்
செயலாளர் : கே. முகமட் பினுஸ்கான் 
உப செயலாளர்  : ஏ.முகமட் சுக்கூர் 
பொருலாளர் : என்.முகமட் ஜமீல்

 ஆகியோர் தெரிவு செய்யப்பட்டார்கள். அதனைத் தொடர்ந்து தலைவர் முனவ்பார்  எம் ரிஸ்வாத் அவர்களின் உரை இடம் பெற்றது இந்த உரையில் எதிர் வரும் காலங்களில் அவர் செய்யவிருக்கும் அபிவிருத்தி திட்டங்கள் பற்றி விளங்கப்படுத்தினார் அவசரமாக செய்யவிருக்கும் செயற்பாடுகள் பற்றி அணைவருக்கும் வலியுறுத்தினார் அதாவது

01, முகைதீன் நகர் கிராமத்திற்கு பெயர் பலகை போட வேண்டும் வீடுகளுக்கு இலக்கங்கள் கொடுக்க வேண்டும் 
02, தெரு விளக்குகள் போட வேண்டும் 
03. அங்கத்தவர்களுக்கு அடையாள அட்டை கொடுக்க வேண்டும் போன்ற விடயங்கள் இந்த வருடம் முடிவதற்கு முன் VESDA இளைஞர் சங்கத்தால் செய்யப்படும் என்று உறுதியளித்தார் இன்னும் பல வேலைத்திட்டங்கள் 2014 ம் ஆண்டில் செய்வதற்கு திட்டமிட்டுள்ளார். அதைத் தொடர்ந்து.

செயலாளர் . கே . முகமட் பினுஸ்கான் அவர்கள் கருத்து தெரிவிக்கையில் வேப்பமடு மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை மேன்படுத்துவதட்காக இலவச வகுப்புக்கள் நடத்தப்பட வேண்டும் அதாவது ஆங்கிலம் / சிங்களம் / கணிதம் போன்ற வகுப்புக்கள் நடத்த திட்டமிடப்பட்டது மேலும் அவர் தெரிவிக்கையில் மந்த நிலையில் செல்லும் VESDA இளைஞர் சங்கத்திற்கு உற்சாகமான அங்கத்தவர்களை சேர்க்கும் பணியில் ஈடுபட வேண்டும் என்று தெரிவித்தார்.

உப தலைவர் எம்.டீ.முகமட் பர்சாத் கருத்து தெரிவிக்கையில் தலைவரோடு இணைந்து சகல வேலைத்திட்டங்கலிலும் முன் மாதிரியாக செயட்படுவதகவும் இவ் வருட இறுதியில் பிரமாண்டமான மென் பந்து சுற்று கிரிகெட் போட்டி VESDA CUP வைக்க வேண்டும் என்றும் தலைவருக்கு தெரிவித்தார்.

அணைவரின் கருத்திற்கும் பொருலாளர் என்.எம்.ஜமீல் கூறினார் அணைத்து வேலைத்த்திட்டங்களுக்கும் பணம் மற்றும் பொருளாதார வசதிகள் அதிகம் தேவைப் படுகின்றது எமது சங்கத்தில் போதியளவு நிதி இல்லாத காரணத்தால் தான் சில காலங்களாக சமூக சேவை பணியைத் தொடர முடியாமல்  போனது எமது சங்கத்தின் வளர்ச்சிக்கு வன்னி மாவட்ட அரசியல் வாதிகள் மற்றும் புத்தளம் மாவட்ட அரசியல்வாதிகலும் அரச சார்பற்ற நிறுவனங்களும் உதவி செய்ய வேண்டும் என்று வேண்டிக்கொண்டார் 

இவ்வாறு பலரின் கருத்துக்களுடன் கூட்டம் இரவு 09 மணியளவில் நிறைவு பெற்றது.

எமது சங்கம் பற்றி மேலதிக விபரங்கள் தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் கீழே உள்ள தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுங்கள் 0715231878 / 0715227607 / 0755517861 / 0770250935 / 
புத்தளம் VESDA இளைஞர் சங்கத்தின் 8வது ஆண்டின் முதலாவது கூட்டம் சிறப்பாக இடம் பெற்றது Reviewed by NEWMANNAR on November 15, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.