யாழ். வவுனியா தனியார் பஸ்கள் மீது இனந்தெரியாதோர் கல்வீச்சு
வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பஸ் மீது இனந்தெரியாத நபர் கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக மாதம்பே பொலிஸார் தெரிவித்தனர்.

மாதம்பை - இரட்டைக்குளம் பகுதியில் வைத்து நேற்று (14) இரவு இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முச்சக்கர வண்டியில் வந்தவர்கள் தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பிச் சென்றதாக பஸ் ஊழியர்கள் பொலிஸ் முறைப்பாட்டில் கூறியுள்ளனர்.
இதேவேளை, நேற்று அதிகாலை சிலாபம் - காக்கைப்பள்ளி மற்றும் மாதம்பை - இரட்டைக்குளம் பகுதிகளில் தனியார் பஸ்கள் மீது கல்வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
யாழ், மற்றும் வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ்கள் மீதே இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதில் காயமடைந்த யாழ். தனியார் பஸ் சாரதி சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
யார், எதற்காக இத்தாக்குதலை நடத்தினர் என்பது இதுவரை தெரியவரவில்லை.
யாழ். வவுனியா தனியார் பஸ்கள் மீது இனந்தெரியாதோர் கல்வீச்சு
Reviewed by Author
on
November 15, 2013
Rating:
Reviewed by Author
on
November 15, 2013
Rating:

No comments:
Post a Comment