அண்மைய செய்திகள்

recent
-

நேற்று மன்னாரில் புலிக்கொடி பறந்தது -காவல் துறை மறுப்பு

எதிர் வரும் 27 ஆம் திகதி மாவீரர் தினம் அனுஸ்ரிக்கப்படவுள்ள நிலையில் நாடளாவிய ரீதியில் மாவீரர் தின நிகழ்வுகள் அனுஸ்ரிக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் மன்னார் பனங்கட்டிக்கொட்டு – எமிழ் நகர் கிராமத்தில் உள்ள டவர்(கோபுரம்) ஒன்றில் திங்கட்கிழமை அதிகாலை தமிழீழ விடுதலைப்புலிகளின் தேசியக்கொடியான ‘புலிக்கொடி’ ஏற்றப்பட்டுள்ளது. 

 இந்த நிலையில் தகவலறிந்த படைத்தரப்பினர் திங்கட்கிழமை காலை சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளனர். இராணுவம்,பொலிஸ் மற்றும் சம்பவ இடத்திற்குச் சென்று கொடியினை அகற்றியுள்ளனர். தற்போது மேலதிக விசாரணைகளை படைத்தரப்பினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சம்பவத்தை மன்னார் காவல் துறையினர் மறுத்துள்ளனர்.அவ்வாறான சம்பவம் இடம் பெறவில்லை என தெரிவித்துள்ளனர்.
நேற்று மன்னாரில் புலிக்கொடி பறந்தது -காவல் துறை மறுப்பு Reviewed by NEWMANNAR on November 26, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.