ஜெயபாலன் இன்றிரவு நாடு கடத்தப்படுகின்றார்
கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள கவிஞரும் நடிகருமான வ.அ.ச.ஜெயபாலன் இன்று செவ்வாய்க்கிழமை இரவு 9.20 மணியளவில் நாடு கடத்தப்படவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
கொழும்பிலிருந்து துருக்கி ஊடாக அவர் நோர்வே சென்றடையவுள்ளதாகவும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய, தமிழ் நாட்டிலிருந்து இலங்கைக்கு வந்து சுற்றுலா விஸா விதிமுறைகளை மீறினார் என்ற குற்றச்சாட்டின் பெயரில் முல்லைத்தீவு, மாங்குளம் பிரதேசத்தில்வைத்து கடந்த வெள்ளிக்கிழமை கைதுசெய்யப்பட்டார்.
பின்னர் கொழும்பிற்கு கொண்டுவரப்பட்ட அவர், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினால் மிரிஹானையிலுள்ள தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
தடுப்பு முகாமிலுள்ள ஜெயபாலனை கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன் இன்று காலை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
அவர் விடுவிக்கப்படவுள்ளமை தொடர்பில் நோர்வேயில் உள்ள ஜெயபாலனின் பாரியாரிடம் தொலைபேசியில் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன் தெரிவித்துள்ளதாக அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜெயபாலன் இன்று 26.11.2013 கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இரவு 9.20 மணிக்கு புறப்படும் (TK731 Turkis)இலக்க விமானம் மூலம் துருக்கி வழியாக பயணமாகி நாளை முற்பகல் 27.11.2013 நோர்வே சென்றடைவார் எனவும் எச்.எச்.விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஜெயபாலன் இன்றிரவு நாடு கடத்தப்படுகின்றார்
Reviewed by NEWMANNAR
on
November 26, 2013
Rating:
.jpg)
No comments:
Post a Comment