வட மாகாண பிரதிநிதிகள் மற்றும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பொன்தீவுகண்டல், பூவரசங்குளம் மக்களுக்கும் 10.11.2013 அன்று இடம்பெற்ற சந்திப்பு - படங்கள்
08.11.2013 அன்று நானாட்டான் பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளாயின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது போல வட மாகாண பிரதிநிதிகளும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும் 10.11.2013 அன்று பொன்தீவுகண்டல் மக்களையும் பூவரசங்குளம் மக்களையும் அவர்களது பிரதேசங்களில் சந்தித்தனர்.
பொன்தீவுகண்டல் மக்கள் சந்திப்பு பொன்தீவுகண்டல் புனித அந்தோனியார் தேவாலயத்தில் நடைபெற்றது. அங்கு கூடியிருந்த மக்கள் குறித்த காணி தங்களது ஊர் எல்லலையில் இருப்பதாகவும் பல வருடங்களுக்கு முன்னர் குறித்த காணியில் தங்களது மக்கள் குடியிருந்ததாகவும் தாங்கள் விசுவாசிக்கும் பூத்தின் பொற்பேளை குறித்த காணிக்குள்ளேயே அமைந்திருப்பதாகவும் அதன் காரணத்தினால் இக்காணியை எமக்கு விட்டுத் தர முடியாது எனவும் உறுதிப்பட தெரிவித்தனர். அத்துடன் முஸ்லிம்களுக்கு காணிகளைப் பெற்றுக் கொடுப்பதால் காலாச்சார சீரழிவுகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலைகள் ஏற்படும் என்றும் இன முரண்பாடுகள் ஏற்படும் என்றும் மக்கள் பொதுவாகக் கருதுகின்றன். மேலும் இதன் பிண்ணனியில் முஸ்லிம் அமைச்சர் ஒருவரும் அரச அதிகாரிகளும் இருப்பதாகவும் மக்கள் குற்றம் சுமத்தினர்.
பூவரசங்குளம் மக்கள் சந்திப்பு மொஹிதீன் ஜும்மாப் பள்ளிவாசலில் நடைபெற்றது. அங்கு கூடியிருந்த மக்கள், குறித்த காணியாயானது எமது ஊருக்கு அருகாமையிலுள்ள ஒரேயொரு அரச காணியாகும். இரு சமூகத்தவரும் மிக நீண்ட காலமாக பொதுத் தேவைகளுக்காக இக்காணியை பயன்படுத்தி வருகின்றோம். இதில் எவருக்கும் தனியுரிமை இருப்பதாக அறியவில்லை. எமது மூதாதையர் குறித்த காணியில் விவசாயம் செய்திருக்கிறார்கள், ஆட்டுப்பட்டிகளை அமைத்திருக்கிறார்கள், குடில்களையும் கொட்டில்களையும் அமைத்து வாழ்ந்திருக்கிறார்கள். பூவரசங்குளம் பிரதேசத்தில் 106 குடும்பங்கள் காணியில்லாத காரணத்தினால் மீள்குடியேற முடியாதுள்ளது. 2005 முதல் காணிக்காக நாம் விண்ணப்பித்திருக்கின்றோம். எல்லாவிதமான பதிவுகளும் எமக்கு இங்கே இருக்கிறது. இரு ஊராருக்கும் மத்தியில் பல சந்திப்புகளின் பின்னர் குறித்த அரச காணியை பிரித்து கையளிப்பது என தீர்மானிக்கப்பட்டது. எமது மக்களின் செலவில் காணிகள் முழுமையாக துப்பரவு செய்யப்பட்டுள்ளது. காணிகள் அரச அளவையாளர்களை கொண்டு அளக்கப்பட்டு பிரிக்கப்பட்டுள்ளது. இந்திய வீட்டுத் திட்டத்தின் நிர்மாணங்களும் இடம்பெற்றுள்ளன. இவ்விடயங்களில் பொன்தீவுகண்டல் மக்கள் எமக்கு ஒத்துழைப்புகளையும் வழங்கினார்கள். அவர்களிடமிருந்து வாகனங்களையும் தொழிழாளர்களையும் பெற்றுக் கொண்டோம். இப்படியெல்லாம் நடந்தேறிய பின்னர் திடீரென அக்காணியில் பிரச்சினைகளை ஏற்படுத்துவது எந்தவகையில் நியாயமானது? அது எல்லாவகையிலும் எங்களுக்கு உரித்தான காணியாகும். இப்பிரச்சினையின் பிண்ணனியில் மன்னாரின் மூத்த மதகுரு இருப்பதாக சந்தேகிக்கின்றோம். அவரே இப்பிரச்சினைக்கு காரணமானவர். மக்கள் அல்ல. மக்கள் தூண்டிவிடப்பட்டுள்ளனர். அப்பிரதேச மக்கள் பொம்மைகளாக்கப்பட்டுள்ளனர். இதனை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
மேலும் நிர்மாணப் பணிகளுக்காக கொண்டுவரப்பட்ட பெருந்தொகையான பொருட்கள் காணிகளில் இருக்கின்றன. இந்திய வீட்டுத் திட்டத்தை துரிதப்படுத்த வேண்டும் தேவை இருக்கிறது. எனவே மக்கள் பிரதிநிதிகளாகிய நீங்கள் துரிதமான தீர்வொன்றை பெற்றுத் தர வேண்டும். அல்லதுவிட்டால் சட்ட ரீதியாக அல்லது வேறு வழிகளில் திர்வுகளை பெற்றுக் கொள்ள வேண்டிய நிலை எமக்கு ஏற்படும் என்று தெரிவித்தனர்.
வட மாகாண பிரதிநிதிகள் மற்றும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பொன்தீவுகண்டல், பூவரசங்குளம் மக்களுக்கும் 10.11.2013 அன்று இடம்பெற்ற சந்திப்பு - படங்கள்
Reviewed by NEWMANNAR
on
November 11, 2013
Rating:

No comments:
Post a Comment