ஜி.ஜி.பொன்னம்பலத்தின் 112 ஆவது ஜனன தினம் யாழில் இன்று
ஜி.ஜி.பொன்னம்பலத்தின் 112 ஆவது ஜனன தின நிகழ்வுகள் இன்று யாழ்ப்பாணத்தில் நினைவு கூறப்பட்டுள்ளது.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் நிறுவுனரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் பிரபல சட்டத்தரணியுமான ஜி.ஜி.பொன்னம்பலத்தின் 112ஆவது ஜனன தின நிகழ்வுகள் குருநகரில் இன்று காலை நடைபெற்றன.
இந்த நிகழ்வுக்கு பாராளுமன்ற உறுப்பினர் விநாயக மூர்த்தி, வடமாகாண சபை உறுப்பினர் சித்தார்த்தன் மற்றும் தமிழ் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
ஜி.ஜி.பொன்னம்பலம் அவர்கள் தமிழ் மக்களை ஒரே குடையின் கீழ் கொண்டு வந்த துணிச்சலும் பற்றுறுதியும் மிக்க அரசியல் போராளியாக வாழ்ந்த மனிதர் என நிகழ்வில் கலந்து கொண்ட பிரமுகர்கள் தெரிவித்தனர்.
ஜி.ஜி.பொன்னம்பலத்தின் 112 ஆவது ஜனன தினம் யாழில் இன்று
Reviewed by NEWMANNAR
on
November 08, 2013
Rating:
.jpg)
No comments:
Post a Comment