இலங்கை, மண்ணின் முதலாவது புனிதராக பட்டம் பெறுவதற்கு சிபாரிசு செய்யப்பட்ட வண.பிதா.அருள் திரு டீ.யு. தோமஸ் அ. ம.தி.அடிகளார்.- படங்கள்
யாழ்பாணம் .அச்சுவேலி தோலகட்டியில் அமைந்துள்ள செபமாலை தாசர் சபையின் ஆரம்ப சேவையை அகில இலங்கையில் முதல் தடவையக ஆரம்பித்தவர் மறைந்த வண பிதா டீ.யு. தோமஸ் அடிகளார் ஆவார். இவர் யாழ்ப்பாணத்தில் திரு. திருமதி. வஸ்தியாம்பிள்ளை, லூசி தம்பதிகளின் மகனாக 07-03-1886 பாண்டியன்தாழ்வு. கிராமத்தில் யாழ்ப்பாணத்தில் பிறந்தார். தமது சிறு பராயத்திலே ஏழைகளின் மேலும,; மிருகங்களின் மேலும் பெரும் இரக்கம் கொண்டவராகவும் காலையும், மாலையும் அருகில் உள்ள தேவாலயத்துக்கு சென்று நற்கருணை ஆண்டவருக்கு முன்னால் முழந்தால் படியிட்டு பல மணி நேரம் தனிமையில் செபிப்பதிலும் ஈடு பட்டார்.
இவரினால் கவரப்பட்ட இளம் பராயத்தினர் பலர் இவரை பின் தொடர ஆரம்பித்தனர். இவர்களை ஒன்று சேர்த்து செபமாலை தாசர் சபை ஒன்றை 02-01-1928 ஆண்டில் ஆரம்பித்தார். பின்பு ஆயர் வந். ஆயர் து.யு..கியோமர் அ.ம.தி தலைமையின் கீழ் புதிய செபமாலை தாசர் சபையை 02-01-1928ம் ஆண்டில் ஆரம்பித்து 18-02-1939ல் அதன் முதல் தலைவராக பணி புரிந்தார். இச்சபையின் யாப்பு விதியை தானே எழுதி ஆயரின் ஒத்துளைப்புடன் ஓர் சிறிய குரு மடத்தை ஆரம்பித்தார். இச்சபையின் முக்கிய செயற்பாடாக அனுதினமும் பல தடலைகள் செபமாலை ஓதல், தேவ நற்கருணைக்கு முன் இரவு பகலாக ஒழுங்கு முறைப்படி ஜெபித்தல், மௌனம் அனுசரித்தல், பிறரின் நடவடிக்கையில் தலையிடாது இருத்தலும் அவர்களின் கஸ்ட துன்பங்களுக்காக ஜெபிப்பதும் ஆகும்.
இவரின் முதலாவது ஆச்சிரமம் அச்சுவேலி பகுதியில் அதிக இந்து மக்கள் வாழும் கிராமத்தில் அமைந்துள்ளது. இச்சபையின் பணி ஏனைய கிறிஸ்தவ குருக்கள் சகோதர சகோதரிகள் போன்றல்லாது தமது உடலை வருத்தி, உபவாசம் இருந்து, முழந்தால் படியிட்டு, கைகளை விரித்து ஜெபிப்பதும், தத்தமது கடமைகளை பிரித்தெடுத்து அவற்றை ஒழுங்காக புரிந்து கொள்ளுவதுமாகும்.
இவரின், இச்சபையினரதும் பொழுது போக்கு நாளாந்த உபவாசம் இருந்து நற்கருணை நாதருக்கு முன் ஜெபிப்பதும், 24 மணித்தியாளங்கள் ஒழுங்கு முறைப்படி இரு சகோதரர்கள் ஆலயத்துள் இரவு பகல் பாராது நற்கருணை நாதருக்கு முன் காவல் காப்பதும், அவர்களை நாடிவரும் உள்ளுர், வெளி ஊர் வாசிகளை வரவேற்பதும் தோட்ட வேலை செய்தலும், ஒஸ்தி செய்தலும், தமதுதோட்டத்தில் இருந்து பெற்ற தோடை, எலுமிச்சை, நெல்லி, கொடிமுந்திரிகை போன்றவற்றிலிருந்து ரசம் தயாரிப்பதும் மேலதிகமானவற்றை விற்று அதில் வரும் பணத்தை தங்களது சபையின் விஸ்தரிப்புக்காக பயன் படுத்துவதுமாகும்.
இன்றும் தோலகட்டி ரசமானது உள் நாட்டிலும், வெளி நாட்டிலும் பெயர் பெற்ற பானமாக விளங்குகின்றது. இதற்காக இவர்களின் இல்லத்தில் ஓர் சிறிய தொழிற்சாலை காணப்படுகிறது. இவரின் காலத்தில் 29 சகோதரர்களும் 90 சகோதரிகளும் உருவாக்கப்பட்டனர். துற்போது 2013ல் இச்சபையானது யாழ்ப்பாணம் மன்னார் நீர்கொழும்பு போன்ற இடங்களில் வியாபித்து தேவ பணிகள் ஆற்றி வருகின்றது. கடினமான உபவாசத்தையும் ஜெபத்தையும் மௌனத்தையும் கொண்ட செபமாலை தாசர் சபையின் இலங்கை பொறுப்பாளராக வண பிதா மு.P. N. சேவியர் இருக்கின்றார் .
வண பிதா டீ.யு.தோமஸ் அடிகளாரின் தூய வாழ்க்கையை உற்று நோக்குகையில் விருப்பமும் ஆர்வமும் உள்ள கிறிஸ்தவ வாலிபர் ஒரு சிலரை தமது சபையில் இணைத்து அவர்களுக்கு 1928ம் ஆண்டுகளில் வேத வசனங்கள், தாழ்ச்சி, கடமையுணர்வு, அர்ப்பணிப்பு போன்றவற்றை போதிப்பதுமாகும். ஆவரை பின்பற்றுபவர்களும்கு ஓர் முன்னுதாரணமாக ஒரு நாளில் பல தடவைகள் உபவாசம் இருந்து தனிமையில் ஜெபித்து வாழ்ந்து காட்டினார். இவர் நற்கருணை நாதரின் முன் இரவு பகலாக ஜெபிக்கும் முறையை சகோதர சகோதரிகளுக்கு கற்று கொடுத்தார்.
கடல் மூலமாகவும் தரை வழியாகவும் தமத சபையினரை அழைத்து சென்று மக்களுக்கு சேவையாற்றுவதற்கு கற்றுக்கொடுத்தார். தமக்கு கீழ் பணியாற்றுபவர்களின் உளநலன்களைப் பேணுவதில் அக்கறை கொண்டார். எளிய முறை வாழ்க்கையை ஏனையோருக்கு கற்றுக்கொடுப்பதற்காகவும்; அயல் கிராம மக்களை தரிசிப்பதற்காகவும் கால் நடையாகவும், மாட்டு வண்டில் மூலமாகவும், சிறு தோணி மூலமாகவும் பயணம் மேற்கொண்டார்.
ஜெபிக்கையில் நற்கருணையில் யேசுவை கண்டதாக சாட்சியங்கள் உண்டு. தமது 26-01-1964ல்; பெலவீனமுற்று படுக்கையிலிருந்து யாழ் ஆயர் இல்லத்தில் தமது உயிரை இறைவனுக்கு அர்ப்பணித்தார். இவரினால் ஆரம்பிக்கப்பட்ட செபமாலை தாசர் சபையானது யாழ் ரெம்பிள் வுநஅpடந சுழயன இ வீதியில் தற்போதும் இயங்கிக்கொண்டிருக்கிறது. போரினால் பாதிக்கப்பட்ட அச்சுவேலி கிராமத்திலிருந்து பொது மக்களும், சகோதர சகோதரிகளும் வெளியேறிய பின்பு இப் பிரதேசம் கவனிப்பாரற்று கைவிடப்பட்டபோது இவரது சபை குருக்கள் 08-03-2006ம் ஆண்டில் இவரின் எலும்புகளை தோண்டி எடுத்து தற்போது இவரின் எலும்புகளை ரெம்பிள் வீதியில் அமைந்துள்ள ஆச்சிரமத்தில் புதைத்துள்ளனர்.
ஆதன் மேல் ஒரு சிறிய கோவிலையும் அமைத்துள்ளனர். இதில் நாளாந்தம் வழிபாடுகள் நடாத்தப்படுகின்றன. வழிபாட்டின் பின் நோயாளர்கள் பொது மக்கள் இவரின் கல்லறைக்கு அருகில் குருக்களினால் ஆசிர்வதிக்கப்படுகின்றனர். பல புதுமைகள் நடந்ததாக பொது மக்கள் குருக்களுக்கு அறிவித்துள்ளனர். தற்போது இவ் ஆச்சிரமத்தின் அதிபராக வண. பிதா. யு.ஆ. ஸ்ரீபன் பணியாற்றுகின்றார். கடந்த மாதம் இவ் ஆச்சிரமத்தை யாம் தரிசித்தபோது கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் வணக்கத்தையும் வண.பிதா.தோமஸ் அடிகளாரின் கல்லறையில் கண்ணீருடன் மக்கள் ஜெபிப்பதையும் கண்கூடாகக் காணக்கூடியதாக இருந்தது.
மன்னாரில் இவ் ஆச்சிரமத்தின் கிளை ஒன்று அருட்சகோதரி நசரேத்தினால் புனித செபஸ்தியார் ஆலய வளவில் உருவாக்கப்பட்டு தற்போது மன்னார் ஆயரின் ஒத்துளைப்புடன் மன்னார் பட்டித்தோட்டத்தில் அருட்சகோதரிகளின் ஆச்சிரமம்; சிறப்பாக இயங்கி வருகின்றது. இதில் தற்போது 12 சகோதரிகளும், 04 நவ கன்னியர்களும் இருக்கின்றனர். கொழும்பை சேர்ந்த சகோதரி பெனடிற்றா அதிகூடிய வயதையுடைய கன்னியாசிரியாக மன்னார் ஆச்சிரமத்தில் திகழ்கின்றார். ஜப்பசி 2013ல் இவரின் 50 வருட யூபிலி சிறப்பாக கொண்டாடப்பட்டது. வண பிதா ஸ்ரீபன் அடிகளார், இலங்கை இந்திய பிராந்திய சபை தலைவராக பல காலம் கடமையாற்றி தற்போது யாழ் ஆச்சிரமத்திற்கு பொறுப்பாக இருக்கின்றார்.
எல்லாம் வல்ல தந்தையாகிய கடவுளே! உமது தாசனாகிய அருள்திரு தோமஸ் அடிகள் இவ்வுலகில் வாழ்ந்த போது பரமதிருத்துவத்தின் ஆலயமாகவும் தூய ஆவியின் நிறைவாகவும் வாழ்ந்து வந்தாரே.
தமது வாழ் நாள் முழுவதும் தாழ்ச்சி மிக்கவராக விளங்கியதுடன் தம்மை அண்டியவர்களையும் தாழ்ச்சியை கடைபிடிக்கத்தூண்டி வந்தாரே. திவ்ய நற்கருணையை பக்தி மையமாக வைத்துச் செபமாலை தாசர் சபையை ஸ்தாபித்தாரே.
அவருடைய புண்னிய வாழ்வை முன்னிட்டு அவர் நாமத்தால் அடியேன் உம்மிடம் இரந்து கேட்கும் இந்த மன்றாட்டைப் பெற்றுக் கொள்ளக் கருணை புரியும் படி உம்மைத் தாழ்ச்சியுடன் வேண்டிக்கொள்கின்றேன்.
அன்பான தந்தையே! உமது திருக்குமாரன் இயேசுக்கிறிஸ்துவின் திருச்சபையின் புனிதர்களுள் இவரையும் ஒருவராகச் சேர்த்துக் கொள்ள உதவும் படியாக நான் கேட்கும் மன்றாட்டை எனக்கு அருளி அவரை இவ்வுலகிலும் மகிமைப்படுத்தும்படி உம்மை பக்தி வைராக்கியத்துடன் பிராத்திக்கின்றேன் ஆமென்.
தகவல்
திரு.சின்கிளேயர் பீற்றர்
தோமஸ் அடிகளாரின் பக்தன்.
இலங்கை, மண்ணின் முதலாவது புனிதராக பட்டம் பெறுவதற்கு சிபாரிசு செய்யப்பட்ட வண.பிதா.அருள் திரு டீ.யு. தோமஸ் அ. ம.தி.அடிகளார்.- படங்கள்
Reviewed by NEWMANNAR
on
November 30, 2013
Rating:
No comments:
Post a Comment