அண்மைய செய்திகள்

recent
-

மாநாட்டில் யாரும் பங்கேற்கக் கூடாது தமிழகச் சட்டசபை நேற்றுத் தீர்மானம்; தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்பு

இலங்கையில் பொதுநலவாய மாநாடு நடத்தப்படுவது போர்க் குற்றவாளிகளைப் பாதுகாப்பது போல் உள்ளது. எனவே மாநாட்டில் இந்தியா பங்கேற்றால் இலங்கையின் போர்க்குற்றத்தை அங்கீகரித்தது போலாகிவிடும். இலங்கையை அங்கீகரித்த பழி இந்தியாவுக்கு ஏற்படுவதை தமிழர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எனவே தமிழக மக்களின் உணர்வுகளை மதித்து மத்திய அரசு, மாநாட்டுக்கு இந்திய வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட யாரும் பங்கேற்கக் கூடாது என்றும், இலங்கையைப் பொதுநலவாய அமைப்பிலிருந்து தற்காலிகமாக நீக்க வேண்டும் என்றும் தமிழக சட்டசபையில் நேற்று மாலை தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

 தமிழக சட்டசபையில் நேற்று மாலை நிறைவேற்றப்பட்டுள்ள இந்தத் தீர்மானத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்பதாக அதன் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். பொதுநலவாய மாநாட்டில் இந்தியா பங்கெடுக்கக் கூடாதென்று தமிழக சட்டசபை ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றியிருந்தது. இதனையடுத்து இந்தியப் பிரதமர் இந்த மாநாட்டில் பங்கெடுக்கமாட்டார் எனவும், வெளிவிவகார அமைச்சர் பங்கெடுப்பார் எனவும் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. 

 இதனையடுத்து நேற்று அவசரமாக கூட்டப்பட்ட தமிழகச் சட்டசபையில் மேற்படி தீர்மானத்தை முதலமைச்சர் செல்வி.ஜெயலலிதா முன்மொழிந்தார். அதில் அவர் தெரிவித்ததாவது: தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்துப் பொதுநலவாய மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும். இலங்கை தமிழர் படுகொலையை கண்டித்து 2011 இல் இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. பெயரளவில் கூட பொதுநலவாய மாநாட்டில் இந்தியா பங்கேற்கக்கூடாது என்று ஏற்கனவே சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

 பொதுநலவாய அமைப்பிலிருந்து இலங்கையை தற்காலிகமாக நீக்க வேண்டும். மனவருத்தம் தமிழர்களுக்குச் சாதகமான நடவடிக்கையை மத்திய அரசு எடுக்கவில்லை. வெளிவிவகார அமைச்சரை அனுப்பியிருப்பது தமிழரின் உணர்வுகளைக் காலில் போட்டு மிதிப்பதற்குச் சமம். மத்திய அரசின் முடிவுக்கு தமிழக அரசு தன் வருத்தத்தை தெரிவிக்கிறது. தமிழர்களுக்கு ஆறுதல் அளிக்காத, உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத மத்திய அரசின் முடிவு மனவேதனையை தருகிறது. இலங்கைக்கு ஆயுதப்போர் உதவி அளித்ததற்கு பரிகாரமாக இந்தியாவிலிருந்து யாரும் பங்கேற்கக்கூடாது. வழக்கமான முடிவு பொதுநலவாய மாநாட்டில் பிரதமர் பங்கேற்காதது வழக்கமான முடிவாக இருக்கிறது.

 கடந்த 1993 ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற 10 மாநாடுகளில் 5 இல் பிரதமர் பங்கேற்கவில்லை. மத்திய அரசின் முடிவைத் தமிழக மக்கள் ஒரு போதும் ஏற்கமாட்டார்கள். இலங்கையில் மாநாடு நடத்துவது போர்க்குற்றம் நடத்தியவர்களை பாதுகாப்பது போல் உள்ளது. மாநாட்டில் இந்தியா பங்கேற்றால் இலங்கையின் போர்க்குற்றத்தை அங்கீகரித்தது போலாகிவிடும். இலங்கையை அங்கீகரித்த பழி இந்தியாவுக்கு ஏற்படுவதை தமிழர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஈழத் தமிழர்கள் துயரத்தில் இலங்கையில் போர் முடிந்து 4 ஆண்டுகள் முடிந்த நிலையில் தமிழர்களுக்கு எந்த உரிமையும் வழங்கப்படவில்லை. தமிழர்கள் பகுதியில் சிங்களவர்கள் வசிக்கின்றனர். 

 தொடர்ந்து பல்வேறு இன்னல்களை இலங்கை தமிழர்கள் அனுபவித்து வருகின்றனர். போர்க்குற்றம் செய்தவர்கள், இனப்படுகொலை புரிந்தவர்கள் தண்டிக்கப்படவில்லை. இதற்காக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தீர்மானத்தை முன்மொழிந்து உரையாற்றிய முதலமைச்சர் தெரிவித்தார். இதன் பின்னர் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வரவேற்பு தமிழக அரசினால் நேற்று மாலை நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்பதாக அதன் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். வடக்கு - கிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளில் சிங்களக் குடியேற்றம் தொடர்கின்றது.

 இராணுவத்தினருக்கான காணி சுவீகரிப்பு மேற்கொள்ளப்படுகின்றது. இவற்றை இலங்கை அரசு நிறுத்திக் கொள்வதற்கு இவ்வாறான அழுத்தங்கள் வழங்கப்படுவது வரவேற்கதக்கது என்று குறிப்பிட்டார். மேலும் இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு வரும் மத்திய அரசின் முடிவை விமர்சிப்பதற்கு தனக்கு உரிமையில்லை என்றும் அவர் கூறினார். விக்னேஸ்வரன் பங்கேற்கார் கொழும்பில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டில் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் பங்கேற்கமாட்டார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் யாரும் பங்கேற்கமாட்டார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.
மாநாட்டில் யாரும் பங்கேற்கக் கூடாது தமிழகச் சட்டசபை நேற்றுத் தீர்மானம்; தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்பு Reviewed by NEWMANNAR on November 13, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.