பொதுநலவாய மாநாட்டை முன்னிட்டு முத்திரை வெளியீடு
பொதுநலவாய மாநாட்டை முன்னிட்டு தபால் சேவைகள் அமைச்சு 5 ரூபா, 25 ரூபா பெறுமதியான இரண்டு முத்திரைகளையும் 30 ரூபா பெறுமதியான தபால் அட்டையொன்றையும் வெளியிடவுள்ளது.
பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் எதிர்வரும் 14 ஆம் திகதி காலை 9.45 மணிக்கு தபால் சேவைகள் அமைச்சர் ஜீவன் குமாரதுங்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பொதுநலவாய செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா ஆகியோருக்கு முத்திரைகளையும் தபால் அட்டையினையும் உத்தியோகபூர்வமாக கையளிக்கவுள்ளார்.
முத்திரைகளும் தபாலட்டையும் ஓவியர் குமுது தாரக்கவினால் வடிவமை க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பொதுநலவாய மாநாட்டை முன்னிட்டு முத்திரை வெளியீடு
Reviewed by NEWMANNAR
on
November 12, 2013
Rating:
Reviewed by NEWMANNAR
on
November 12, 2013
Rating:


No comments:
Post a Comment