மன்னார் உதைபந்தாட்ட லீக் செயலாளர் மலேசியா பயணம்
மன்னார் உதைபந்தாட்ட லீக் செயலாளர் திரு ப.ஞானராஜ் அவர்கள் உதைபந்தாட்ட முகாமைத்துவ நிர்வாக கற்கை நெறிக்காக இம்மாதம் 30ம் திகதி மலேசியா செல்கிறார்.
இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தினால் இவர் தெரிவுசெய்யப்பட்டு மலேசியாவின் தலைநகர் கோலாலம்புரில் உள்ள ஆசிய உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தலைமைக்காரியாலயத்தில் நடைபெறும் இப்பயிற்சி நெறியில் இவர் கலந்துகொள்ளவுள்ளார்.
இவர் இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் கவுன்சில் உறுப்பினராகவும் மன்னார் உதைபந்தாட்ட லீக்கின் பொதுச் செயலாளராகவும் மன்னார் மாவட்ட இணைப்பாளராகவும் உதைபந்தாட்ட முதல் தர பயிற்றுவிப்பாளராகவும் கடமையாற்றிக்கொண்டிருக்கிறார்.
அத்துடன் மன்னார் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியின் உடற்கல்வி ஆசிரியராகவும் பிரபல்யமான உதைபந்தாட்ட பயிற்றுவிப்பாளராகவும் திகழ்கின்றார். இவரை மன்னார் உதைபந்தாட்ட கழகங்கள் இரசிகர்கள் சார்பாக வாழ்த்துகின்றோம்.
மன்னார் உதைபந்தாட்ட லீக் செயலாளர் மலேசியா பயணம்
Reviewed by NEWMANNAR
on
November 15, 2013
Rating:
Reviewed by NEWMANNAR
on
November 15, 2013
Rating:
.jpg)

No comments:
Post a Comment