அண்மைய செய்திகள்

recent
-

வடக்கு கிழக்கு மாகாண லீக்குகளுக்கிடையிலான மாபெரும் உதைபந்தாட்டப்போட்டி

மன்னார் பனங்கட்டுக்கொட்டு கிராமத்தை சேர்ந்த அமரர்கள் திரு திருமதி மரிசலீன் அவர்களின் ஞாபகார்த்தமாக அவர்களின் குடும்பத்தாரின் நிதியுதவியுடன் மன்னார் சென் ஜோசப் வி க இன் ஆதரவுடன் மன்னார் உதைபந்தாட்ட லீக்கினால் வடக்கு கிழக்கு மாகாண உதைபந்தாட்ட லீக்குகளுக்கிடையிலான மாபெரும் உதைபந்தாட்ட போட்டி நவம்பர் மாதம் 22  23,24 ம் திகதிகளில் மன்னார் நகர சபை மைதானத்திலும் தாழ்வுபாடு உதைபந்தாட்ட சம்மேளன மைதானத்திலும் சிறப்பாக நடைபெறவுள்ளது. 

இதில் பருத்தித்துறை  யாழ்ப்பாணம்  முல்லைத்தீவு  கிளிநொச்சி  வவுனியா இ மட்டக்களப்பு , திருகோணமலை  ,அம்பாறை ஆகிய லீக்குகளிலிருந்து சிறந்த 2 அணிகள் வீதம் 16 அணிகளும் மன்னார் லீக்கிலிருந்து சிறந்த 16 அணிகளுமாக 32 சிறந்த அணிகள் இம்மாபெரும் சிறந்த உதைபந்தாட்ட போட்டியில் பங்குபற்றவுள்ளன. 

வடக்கு கிழக்கு லீக்குகளுக்கிடையிலான இம் மாபெரும் போட்டியை உதைபந்தாட்ட ரசிகர்கள் மிக ஆவலுடன் பரபரப்பாக எதிர்பார்த்தவண்ணமுள்ளனர். இவ்வாறான வடக்கு கிழக்கு மாகாணங்களின் லீக்குகளின் சிறந்த அணிகள் பங்குபற்றுவது இதுவே வரலாற்றில் முதல் தடவையாகும்.

 முதலாம் இடத்திற்கு 50000.00 பணப்பரிசுடன் வெற்றிக்கிண்ணம் தங்கப்பதக்கமும் 2ம் இடத்திற்கு 30000.00 பணப்பரிசும் வெற்றிக்கிண்ணம் பதக்கமும் அரையிறுதியில் தோல்வியடையும் இரு அணிகளுக்கும் தலா 5000.00 வீதமும் பரிசுகள் வழங்கப்படவுள்ளது. அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். 

தகவல் 
ப.ஞானராஜ் 
லீக் செயலாளர் 
மன்னார்
வடக்கு கிழக்கு மாகாண லீக்குகளுக்கிடையிலான மாபெரும் உதைபந்தாட்டப்போட்டி Reviewed by NEWMANNAR on November 15, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.