அண்மைய செய்திகள்

recent
-

பிரிட்டன் பிரதமர் கமரூனின் யாழ் விஜயத்தை முன்னிட்டு காணாமல் போனவர்களின் உறவினர்களால் கவனயீர்ப்பு போராட்டம்.

பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூனின் யாழ் . விஜயத்தை முன்னிட்டு நல்லூர் ஆலய முன்றலில் காணாமல் போனவர்களின் உறவினர்களால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று ( 15 ) காலை நடத்தப்பட்டது . கொழும்பில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டில் பங்கெடுப்பதற்காக இலங்கை வந்த பிரிட்டன் பிரதமர் இன்று மாலை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்கிறார் .

 யாழ் . விஜயத்தை முன்னிட்டு அவரின் கவனத்தை ஈர்க்கும் முகமாக நல்லூர் ஆலய முன்றலில் காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை காணாமல் போனவர்களின் உறவுகளால் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது . இரகசிய முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக நம்பப்படும் தமது உறவுகள் பற்றி தெரியப்படுத்துமாறு கோரி உறவுகள் கதறி அழுதார்கள் .

 அதேவேளை , யாழ் . விஜயம் செய்யும் பிரிட்டன் பிரதமர் யாழ் . பொது நூல் நிலையத்தில் மாலை 3 மணியளவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா . சம்பந்தன் , வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் ஆகியோரைச் சந்திக்கவுள்ளார் . பொது நூல் நிலையத்தில் இச்சந்திப்பு நடைபெறும் வேளை , பொது நூல் நிலையம் முன்பாக காணாமல் போனவர்களின் உறவுகளால் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
பிரிட்டன் பிரதமர் கமரூனின் யாழ் விஜயத்தை முன்னிட்டு காணாமல் போனவர்களின் உறவினர்களால் கவனயீர்ப்பு போராட்டம். Reviewed by NEWMANNAR on November 15, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.