தமிழையும் ஆட்சி மொழியாக அமுலாக்க புத்திஜீவிகளிடமிருந்து கருத்துக்கள் கோரல். மாற்றுக் கருத்தாடலுக்கான அமையம்.
தமிழ் மொழியையும் அர்த்தமுள்ள வகையில் ஆட்சி மொழியாக அமுலாக்குவதற்கு உரிய
செயற்பாட்டு அறிக்கையில் இடம்பெறவேண்டிய கருத்துக்களை புத்திஜீவிகளிடமிருந்து மாற்றுக்கருத்தாடலுக்கான அமையம் கோரியுள்ளது .
இந்த அமையம் சமர்ப்பிக்கவுள்ள அறிக்கையில் தமது கருத்துக்களை சேர்த்துக்கொள்ள விரும்புவோர் எதிர்வரும் 17 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் நடைபெறவுள்ள திறந்த கலந்துரையாடலில் நேரில் கலந்துகொண்டோ அல்லது தொடர்பு கொண்டோ கருத்துக்களைத் தெரிவிக்கலாம் என அறிவி க்கப்பட்டுள்ளது .
மாற்றுக்கருத்தாடலுக்கான அமையம் தமிழ் மொழியை அர்த்தமுள்ள வகையில் அமுலாக்கம் தொடர்பான முதற்கட்ட அறிக்கையில் கல்வி அமைச்சு , பொதுநிர்வாக அமைச்சு , நீதி அமைச்சு ஆகிய மூன் றும் தனித்தனியாக மேற்கொள்ள வேண்டிய விடயங்கள் தொடர்பான அம்சங்களை தயாரிக்கவுள்ளது .
அமையத்தின் 5 ஆவது திறந்த கருத்தாடலுக்கான அமர்வு எதிர்வரும் 17 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் நடைபெறவுள்ளது .
அறிக்கையில் தமது கருத்துக்களை அர்த்தமுள்ள ஆலோசனைகளில் இடம்பெறச்செய்ய விரும்புவோர் 0714427784 , 071 4302909 ஆகிய தொலைபேசி இலக்கங்களு டன் தொடர்பு கொண்டு அறிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது .
மூன்று அமைச்சுக்களிலும் கையளிக்கப்படவுள்ள அறிக்கையின் இறுதி வடிவம் எதிர்வரும் 17 ஆம் திகதி நடைபெறும் அமையத்தின் திறந்த கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டு அமையத்தின் மொழியு ரிமை மாநாட்டில் அங்கீகரிக்கப்பட்டு மூன்று அமைச்சுக்களிலும் தனித் தனியாக கையளிக்கப்பட்ட பின்னர் அறிக்கை தமிழ் , சிங்களம் , ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிக ளிலும் பகிரங்கமாக வெளியிடப்படவுள்ளன . மொழியுரிமை மாநாடு எதிர்வரும் 30 ஆம் திகதி நடைபெறவுள்ளது .
முதற்கட்ட அறிக்கையை அடுத்து ஏனைய அமைச்சுக்களுக்கான தமிழ் மொழி அமுலாக்கல் அறிக்கைகள் தயாரிக்கப்ப டவுள்ளன .
கல்வி , நீதி , பொதுநிர்வாகம் மூன்று மக்களின் நாளாந்த வாழ்வில் உடன் தேவைகளாக இருப்பதால் முன்னுரிமை அடிப்படையில் தயார் செய்யப்பட்டுள்ளது என அமைப்பாளர் தெரிவித்தார் .
தமிழையும் ஆட்சி மொழியாக அமுலாக்க புத்திஜீவிகளிடமிருந்து கருத்துக்கள் கோரல். மாற்றுக் கருத்தாடலுக்கான அமையம்.
Reviewed by NEWMANNAR
on
November 15, 2013
Rating:
Reviewed by NEWMANNAR
on
November 15, 2013
Rating:
.jpg)

No comments:
Post a Comment