அண்மைய செய்திகள்

recent
-

இலங்கை அரசின் போர் இழப்பு கணக்கெடுப்பு வெறும் கண்துடைப்பு- ஆஸி. தமிழ் காங்கிரஸ்

இலங்கை போரில் உயிரிழந்தவர்கள் மற்றும் இழப்புக்கள் குறித்து இலங்கை அரசு மேற்கொண்டுள்ள கணக்கெடுப்பு தொடர்பில் அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ் சந்தேகம் வெளியிட்டுள்ளது. 

இலங்கை அரசு மற்றும் அரச அதிகாரிகள் நேர்மையான முறையில் இந்த கணக்கெடுப்பை மேற்கொள்ள மாட்டர் என அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸின் தேசிய செய்தித் தொடர்பாளர் சாம் பாரி தெரிவித்துள்ளார். 

சுயாதீன அமைப்பொன்றின் மூலமாக இந்த கணக்கெடுப்பு நடவடிக்கை கண்காணிக்கப்படுகின்ற வரையில் இதனை நம்ப முடியாது என சாம் பாரி குறிப்பிட்டுள்ளார். 

நாடெங்கிலும் 30 ஆண்டுகால யுத்தத்தினால் மரணித்தவர்கள், காணாமல் போனவர்கள், காயமடைந்தவர்கள், ஊனமுற்றவர்களின் விபரங்களையும், சொத்துக்களுக்கு ஏற்பட்ட அழிவுகள் பற்றிய விபரங்களை அறிவதற்கு இதன் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

ஆறு மாத காலப்பகுதியில் 14,000 உத்தியோகத்தர்களின் உதவியோடு 14,000 கிராமங்களில் இந்த கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. 

இலங்கை அரசின் போர் இழப்பு கணக்கெடுப்பு வெறும் கண்துடைப்பு- ஆஸி. தமிழ் காங்கிரஸ் Reviewed by Author on November 30, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.