ஏமாற வேண்டாம் அவதானம் தேவை : தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி பொலிஸார் எனக் கூறி பணம் பறிப்பு
தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தும் நபர்கள் பொலிஸ் அதிகாரிகள் எனக் கூறி முறைப்பாடுகள் பற்றி குறிப்பிட்டு, வங்கி கணக்கு இலக்கம் ஒன்றை வழங்குவதாகவும், அந்த வங்கி கணக்கு இலக்கத்திற்கு பணம் வைப்பு செய்தால் உங்கள் மீதான முறைப்பாட்டிலிருந்து விடுவிப்பதாகவும் தெரிவிப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இவ்வாறான மோசடியில் ஈடுபடுபவர்களுக்கு பயந்து பலர் பணத்தை வைப்பு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எந்தவொரு பொலிஸ் அதிகாரியும் இவ்வாறு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்த மாட்டார் என அஹித் ரோஹண கூறினார்.
மேற்குறிப்பிட்டவாறு தொலைபேசி அழைப்புக்கள் ஏற்படுத்தப்படின், அருகில் இருக்கும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யுமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஏமாற வேண்டாம் அவதானம் தேவை : தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி பொலிஸார் எனக் கூறி பணம் பறிப்பு
Reviewed by Author
on
November 30, 2013
Rating:

No comments:
Post a Comment