ஆசிரியர்கள் கௌரவிப்பு நிகழ்வு மன்னாரில் -படங்கள்
25 வருடங்கள் சிறந்த சேவையினை கல்வி சமூகங்களுக்கு வழங்கி வரும் அதிபர் ஆசிரியர்கள் மற்றும் 5 வருடங்கள் துறைசார் ஆசிரியர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை காலை மன்னார் மன். சித்தி விநாயகர் இந்து தேசிய கல்லூரியில் நடைபெற்றது.
மன்னார் வலயகல்வி பணிப்பாளர் எம்.எம்.சியான் தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வட மாகாண கல்வி,கலாசார,விளையாட்டு,இளைஞர்விவகார அமைச்சர் த.குருகுலராசா மற்றும் கௌரவ விருந்தினராக வடமாகாண சபை உறுப்பினர் பிறிமுஸ் சிராய்வா,மன்னார் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி .ஸ்டான்லி டி மெல் மன்னார் நகரசபை முதல்வர் ஞானபிரகாசம் ஆகியோர் கலந்து கொண்டு அதிபர் ஆசிரியர்களை கௌரவப்படுத்தி அவர்கள் கல்வி சமூகங்களுக்கு ஆற்றிய சேவையினை பாராட்டி விருதுகளை வழங்கிவைத்தார்.
சிறந்த சேவையாற்றிய அதிபர்,ஆசிரியார்களுக்கு விருதினை வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இதன்படி மன்னார் வலய கல்வி பிரிவுக்குட்பட்ட 25 வருட சேவையினை பூர்த்தி செய்த 108 அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களும், அதேபோன்று வலயத்தில் சேவையாற்றும் 108 ஆசிரியர்கள் , 25 வருடங்கள் சேவையினை பூர்தி செய்த மன்னார் கல்வி வலயத்தை சேர்ந்த 23 கல்விசார் அதிகாரிகளும் , பிரதிபா பிரபா விருது பெற்ற 8 துறைசார் ஆசிரியர்களும் , 14 கல்வி சார் அதிகாரிகளும் அதிகாரிகள் கௌரவிக்கப்பட்டனர்
இன் நிகழ்வில் பிரதி கல்வி பணிப்பாளர் நிர்வாகம் திருமதி.ஏ .ஆரோக்கியநாதன்,எம்.லீயோன் றெவல்,ரீ.கிறிஸ்ரிராஜா,எஸ்.சண்முகலிங்கம்,சி.கமலராஜன், கோட்டக்கல்வி அதிகாரிகளான ரீ.ஜெகநாதன்,ஏ.எஸ்.யுனைட்,எஸ் .தாவீது உயர் அதிகாரிகள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
ஆசிரியர்கள் கௌரவிப்பு நிகழ்வு மன்னாரில் -படங்கள்
Reviewed by Author
on
November 12, 2013
Rating:

No comments:
Post a Comment